புதுதில்லி:
இந்தியாவின் காஷ்மீர், சியாச்சின் மற்றும் குஜராத் எல்லையையொட்டிய ஜூனாகத் பகுதிகள், பாகிஸ்தானுக்கு சொந்தம் என்று கூறி, அந்நாடு வெளியிட்டுள்ள புதிய வரைபடத்திற்கு இந்திய வெளியுறவுத்துறை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்திய - நேபாள எல்லைப் பகுதியில் அமைந்திருக்கும் லிம்பியதூரா, லிபுலேக், கலபானி உள்பட இந்திய எல்லைக்குஉட்பட்ட 4 பகுதிகளை தனது பகுதிகளாக வரைபடம் வெளியிட்டு, நேபாளப் பிரதமர்சர்மா ஒளி அண்மையில் சர்ச்சையைக் கிளப்பினார்.இந்நிலையில், இந்தியாவின் காஷ்மீர்,சியாச்சின், ஜூனகத் பகுதிகள் தங்களுக்குசொந்தமானவை என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானும் புதிய வரைபடத்தைவெளியிட்டுள்ளார். புதிய வரைபடம் தொடர்பாக இம்ரான்கான் ஊடகங்கள் மத்தியில் உரை ஒன்றையும் நிகழ்த்தியுள்ளார்.
“இன்று, பாகிஸ்தானின் புதிய வரைபடத்தை உலகிற்கு முன்னால் அறிமுகப்படுத்துகிறோம். இனிமேல், இதுதான் பாகிஸ்தானின் அதிகாரப்பூர்வ வரைபடமாக இருக்கும். இந்த வரைபடம் காஷ்மீர் மற்றும் பாகிஸ்தான் மக்களின் நிறைவேறாத விருப்பங்களுக்கு ஒப்புதல்அளிக்கிறது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5-ஆம்தேதி காஷ்மீர் தொடர்பாக இந்தியா எடுத்தசட்டவிரோத நடவடிக்கையை (சிறப்பு அந்தஸ்து 370-ஐ ரத்து செய்தல்) இந்த வரைபடம் ரத்து செய்கிறது” என்று கூறியுள்ளார்.“கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம் தேதிஇந்தியா ஒரு புதிய வரைபடத்தை வெளியிட்டு கேலி செய்தது. அதற்கு பாகிஸ்தான்தற்போது பதில் அளித்துள்ளது. இந்த புதியவரைபடம் பாகிஸ்தான் அரசாங்கத்தால் இதுவரை மூடப்பட்ட கதவுகளுக்குப் பின் னால் மட்டுமே பேசப்பட்டது. இன்று, எங் கள் அரசாங்கம் அந்த வரைபடத்தை முழுஉலகிற்கும் வெளிப்படுத்தியுள்ளது” என்றுபாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா மஹ்மூத் குரேஷியும் கூறியுள்ளார்.“புதிய வரைபடத்தில், காஷ்மீர்,ஆசாத் காஷ்மீர், கில்கிட் பால்டிஸ்தான்உள்ளது. சியாச்சினும் சேர்க்கப்பட்டுள் ளது. சர்ச்சைக்குரிய பிரதேசத்தை குறிக்கப் பயன்படுத்தப்படும் ‘புள்ளியிடப்பட்ட கோட்டினை’ நாங்கள் அகற்றியுள்ளோம்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு இந்தியா தற்போது கண்டனம் தெரிவித்துள்ளது. மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஜம்மு-காஷ்மீர் மற்றும் குஜராத் மாநில எல்லைப்பகுதிகளை இணைத்து, புதிய வரைபடத்தை வெளியிட்டுள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் செயல் அரசியல் ரீதியாகவும், நிர்வாக ரீதியாகவும் ஏற்கத்தக்கதல்ல. பாகிஸ்தானின் அபத்தமான இந்தநடவடிக்கை சட்டரீதியாக செல்லுபடியாகாது; சர்வதேச சமூகத்தின் மத்தியிலும் எடுபடாது” என்று கூறப்பட்டுள்ளது.