tamilnadu

img

வேறுபட்ட சமூகத்தினரை படுக்கை பங்காளிகளாக காட்டுவதா? ‘பிக்பாஸு’க்கு தடை விதிக்க வேண்டும்!

லக்னோ:
இந்தியில் நடிகர் சல்மான் கான்தொகுத்து வழங்கும் ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சி கலாச்சாரத்தை இழிவுபடுத்துவதாக, இந்துத்துவா அமைப்புகள் கூச்சல் எழுப்பியுள்ளன.இந்தியில் ‘பிக்பாஸ் ரியாலிடி ஷோ’வின் 13-வது சீசன் நிகழ்ச்சிகளை பிரபல பாலிவுட் நடிகர் சல்மான்கான் நடத்தி வருகிறார். தனியார் தொலைக்காட்சி ஒன்றில் கடந்தஇரண்டு வாரங்களாக ஒளிபரப்பாகிவரும் இந்நிகழ்ச்சி பார்வையாளர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்நிலையில், ‘பிக்பாஸ் ரியாலிடி ஷோ’ உடனடியாக நிறுத்தப்பட வேண்டுமென பிராமண மகாசபை கோரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக காசியாபாத் மாவட்டஆட்சியருக்கு குறிப்பு ஒன்றையும்பிராமண மகாசபை சமர்ப்பித்துள் ளது.உத்தரப்பிரதேச நவ நிர்மாண் சேனா தலைவர் அமித் ஜானி என்பவர், ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி நிறுத்தப்படும் வரை எந்த உணவு தானியத்தையும் சாப்பிட மாட்டேன் என்று பட்டினிப்போராட்டம் அறிவித்துள்ளார்.சல்மான் கான் நடத்திவரும் பிக்பாஸ் ரியாலிடி ஷோ- மிகப்பெரியகலாச்சார கேட்டை விளைவிப்பதால், அதற்குத் தடை விதிக்க வேண்டும் என்று, காஜியாபாத்தைச் சேர்ந்தபாஜக எம்எல்ஏ நந்த் கிஷோர் குஜ்ஜார்கூறியுள்ளார்.இதுதொடர்பாக, மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு கடிதம் ஒன்றையும் அவர் எழுதியுள்ளார்.“இந்த நிகழ்ச்சி மிகவும் ஆட்சேபணைக்குரிய நெருக்கமான படுக்கைக் காட்சிகள் கொண்டுள்ளது. இதில் வேறுபட்ட சமூகத்தைச்சார்ந்தவர்கள் படுக்கை பங்காளிகளாக காட்டப்படுகிறார்கள். அதன்மூலம் எப்போதைக்குமான படுக்கைநண்பர்கள் என்ற கருத்தாக்கம் ஒன்றையும் இந்நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் உருவாக்குகிறார்கள். நேரடியான ஆபாச காட்சிகள் கொண்ட பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு உடனடியாக தடை விதிக்க வேண்டும்” என்று நந்த்கிஷோர் குஜ்ஜார் கூறியுள்ளார்.