லண்டன்
ஐரோப்பா கண்டத்தில் செழுப்புமிக்க நாடான பிரிட்டனில் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது.
கொரோனா வைரஸை கட்டுப்படுத்த பிரிட்டன் அரசு ஊரடங்கு விதித்து பல்வேறு அதிரடி நடவடிக்கை எடுத்தாலும் அங்கு கொரோனா பரவலை கட்டுப்படுத்த முடியவில்லை. தற்போதைய நிலவரப்படி பிரிட்டனில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 3 ஆயிரத்து 93 ஆக உயர்ந்துள்ளது. 13,729 பேர் பலியாகியுள்ள நிலையில், அங்கு சிகிச்சை முடிந்து வீடு திரும்பியவர்களின் புள்ளி விபரம் கிடைக்கவில்லை.
பிரிட்டனில் தினமும் சராசரியாக 4000 பேர் வீதம் கொரோனவால் பாதிக்கப்படுவதால் ஊரடங்கை மேலும் 3 வாரங்களுக்கு நீட்டிக்கப்படுவதாகப் பிரிட்டன் பிரதமர் பொறுப்பைக் கவனித்து வரும் வெளியுறவுத்துறை அமைச்சர் டோமினிக் ராப் அறிவித்துள்ளார். மேலும் கொரோனா பரவல் மற்றும் உயிரிழந்தோர் எண்ணிக்கை போன்றவை குறைந்தால் மட்டுமே ஊரடங்கைத் தளர்த்துவது பற்றிச் சிந்திக்க முடியும் எனக் கூறியுள்ளார்.