tamilnadu

img

பிரேசிலில் கொரோனா பாதிப்பு 3 லட்சத்தை நெருங்குகிறது...  

ரியோ 
தென் அமெரிக்கக் கண்டத்தின் மிகப்பெரிய நாடான பிரேசிலில் கொரோனா வைரஸ் தாறுமாறான வேகத்தில் பரவி வருகிறது. பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதாகக் கூறினாலும், கொரோனா பரவல் குறைவதாகத் தெரியவில்லை.  அந்நாட்டு அரசு ஊரடங்கைத் தளர்த்துவதில் அதிக ஆர்வம் கொண்டுள்ளது. இதனால் பிரேசில் ஜனாதிபதியின் கொரோனா தடுப்பு நடவடிக்கை சரியில்லை எனக் கூறி அந்நாட்டு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 

இந்நிலையில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் அங்கு 21 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2 லட்சத்து 93 ஆயிரமாக உள்ளது. குறிப்பாக அமெரிக்காவிற்கு அடுத்த படியாக ஒரு நாடு ஒரே நாளில் 20 ஆயிரத்திற்கும் அதிகமான பேர் கொரோனா பேரை கொரோனா நோயாளிகளாக மருத்துவமனைக்கு அனுப்புவது இதுவே முதல் முறையாகும். அந்த சோகமான வரலாற்றைப் பிரேசில் படைத்துள்ளது. மேலும் கடந்த 24 மணிநேரத்தில் பிரேசிலில் 911 பேர் பலியாகியுள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை  18 ஆயிரத்து 894 ஆக அதிகரித்துள்ளது. 1 லட்சத்து 16 ஆயிரம் கொரோனாவை வென்று வீடு திரும்பியுள்ளனர்.

கொரோனா சோதனைகள் 7 லட்சத்திற்கும் அதிகமாக எடுக்கப்பட்டுள்ளதால் பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் சூழல் உருவாகியுள்ளது.