tamilnadu

img

அமெரிக்காவின் அச்சுறுத்தலுக்கு சீன மக்கள் அஞ்ச மாட்டார்கள் - சீனா பதிலடி


அமெரிக்கா திடீரென் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான சுங்க வரியை சுமார் 20 கோடி அமெரிக்க டாலர் அளவிற்கு  உயர்த்தியது. இதனால் சீனாவின் தொழில் வர்த்தகம் கடும் பாதிப்பு ஏற்படும் நிலை உருவானது. இதையடுத்து அமெரிக்காவின் உள்நோக்கத்தை முறியடிக்கும் வகையில் சீனா அமெரிக்க பொருட்களுக்கு பன்மடங்கு சுங்க வரியை உயர்த்தியது. 
தற்போது சீனா உயர்த்திய சுங்க வரியை குறைக்க வேண்டும் என அமெரிக்கா மன்றாடி வருகிறது. மேலும் பேசி தீர்த்துக்கொள்ளலாம் என அமெரிக்க கேட்டுக்கொண்டு இருக்கிறது. இந்நிலையில் ஜி 20 மாநாட்டில் சீனா அமெரிக்க பொருட்கள் மீதான வரியை குறைக்காவிட்டால் சீன பொருட்களின் மீது மேலும் வரியை உயர்த்துவோம் என மீண்டும் சீனாவை வம்பிற்கு இழுத்திருந்தார் டிரம்ப். 
இதற்கு பதிலளித்துள்ள சீனா, எப்போதும் சீனா வர்த்தகம் தொடர்பான சிக்கல்களை பேச்சுவார்த்தை மூலம் சுமூகமாக தீர்க்க முடியும் என நம்புகிறது. அதே  நேரம் சமநிலையிலான பேச்சுவார்த்தையையே சீனா விரும்புகிறது. அதிகாரம் செலுத்தலாம் என்று நினைத்தால் அதனை ஒரு போதும் சீனா அனுமதிக்காது. பேச்சு வார்த்தையின் போது அவரவருக்கான எல்லைக் கோடுகளை மீறக்கூடாது. அப்படி மீறும் போது எக்காரணம் கொண்டும் சீனா அதனை விட்டுக்கொடுக்காது. தற்போதைய நிலையை அமெரிக்கா தனக்கு சதகமாக தவறாக கணக்கிட கூடாது. சீனா எப்போதும்  சொந்த நாட்டின் நியாயமான உரிமைகளை உறுதியாக பேணி காக்கும் என்பதையும் அமெரிக்கா புரிந்து கொள்ள வேண்டும். அமெரிக்காவின் இந்த அச்சுறுத்தலுக்குச் சீன மக்கள் ஒருபோதும் அஞ்ச மாட்டோம் என்பதையும் அமெரிக்கா புரிந்து கொள்ள வேண்டும் என்று சீன வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் கெங் சுவாங் தெரிவித்துள்ளார்.