tamilnadu

img

இந்திய பங்குச்சந்தை வர்த்தகம் இறங்குமுகமாக உள்ளது - ரிசர்வ் வங்கி

இந்திய பங்கு சந்தையான சென்செக்ஸ் கடந்த சில நாட்களாக இறங்கு முகத்தில் வர்த்தகமாவதால் முதலீட்டாளர்கள் நஷ்டத்தை சந்தித்துள்ளனர்.

இது குறித்து ரெலிகேர் தரகு நிறுவனத்தின் துணை தலைவர் அஜித் மிஸ்ரா கூறியதாவது, இந்திய பங்குச் சந்தை வர்த்தகமானது கடந்த சில நாட்களாக இறங்கு முகத்தில்  செல்கிறது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 433 புள்ளிகள் இறக்கம் கண்டு வர்த்தகமானது. இதற்கு ஆர்பிஐ வட்டி விகித முடிவுகள் மற்றும் ஜிடிபி கணிப்புகள் தான் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் மத்திய ரிசர்வ் வங்கி கூறிகையில், இந்திய பொருளாதார ஜிடிபி-யில், உள்நாட்டுத் தேவை என்பது அதிகரிக்காமல் பலவீனமாக உள்ளது. மேலும் ரிசர்வ் வங்கி செய்த தொழில் துறை கணிப்பு சர்வேயிlல் எதிர்மறையாகவே உள்ளது. அதாவது தொழில் துறையினர் எந்த ஒரு விரிவாக்கப் பணிகளையும் மேற்கொள்ளவில்லை என்பதை சர்வே கூறுகிறது. இதனை தொடர்ந்து இந்தியாவின் உற்பத்தியை, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் வியாபாரமும் சர்வதேச அரங்கில் மந்தநிலையை சந்தித்துள்ளதாக கூறியுள்ளது.

இந்நிலையில் ஐந்து வர்த்தக நாட்களில் மட்டும் சென்செக்ஸ் சுமாராக 1300 புள்ளிகள் இறக்கம் கண்டுள்ளது. இதனால் சென்செக்ஸில் வியாபாரம் செய்யும் முதலீட்டாளர்கள் பல லட்சம் வரை நஷ்டத்தை சந்தித்துள்ளதாக கூறியுள்ளனர்.