tamilnadu

img

வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்: பணிகள் முடக்கம்

சென்னை, அக். 22- மத்திய நிதி அமைச்சர் நிர்மலா  சீதாராமன், கடந்த மாதம் 10 பொதுத்துறை வங்கிகளை இணைத்து 4 வங்கிகளாக மாற் றப்படும் என்று அறிவித்தார். இதையடுத்து 10 பொதுத்துறை வங்கிகளை 4 வங்கிகளாக குறைக்கும் முடிவை மத்திய  அரசு செயல்படுத்த தொடங்கி யுள்ளது. இதற்கு வங்கி ஊழியர் சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரி வித்து வருகின்றன. நாடு முழுவ தும் ஊழியர்கள் தொடர் போராட்  டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒருபகுதியாக செவ்வா யன்று (அக். 22) வேலை நிறுத்தம்  நடைபெறும் என அகில இந்திய  வங்கி ஊழியர்கள் சங்கம், இந்திய வங்கி ஊழியர் சம்மேள னம் சார்பில் அறிவிக்கப்பட்டி ருந்தது. திட்டமிட்டபடி வேலை நிறுத்தம் நடைபெற்றது. காசோலை பரிமாற்றம், பணம் டெபாசிட் செய்தல், பணம் எடுத்தல் உள்ளிட்ட பணப் பரி மாற்றம் அனைத்தும் முடங்கி யது. அரசு கருவூலக சேவை களும் பாதிக்கப்பட்டன.

சென்னையில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள வங்கி ஊழியர்கள் பாரிமுனையில் உள்ள நாயக் பவன் முன்பு அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்க பொதுச் செயலாளர் சி.எச். வெங்கடாசலம், இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம் என்.ராஜ கோபால் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில்  அகில இந்திய வங்கி ஊழியர்கள்  சங்க பொருளாளர் சி.எஸ்.வேணு கோபால், மாநில பொதுச் செய லாளர் இ.அருணாச்சலம், இந்திய வங்கி ஊழியர் சம்மேள னம் அகில இந்திய செயலாளர் கே.கிருஷ்ணன், இணைச் செயலாளர் சி.பி.கிருஷ்ணன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.   இதுகுறித்து சி.எச்.வெங்க டாச்சலம் செய்தியாளர்களிடம் கூறுகையில்,“வங்கி இணைப்பு நடவடிக்கையை மத்திய அரசு கைவிட வேண்டும். இல்லை என்றால், தொடர் வேலை நிறுத்  தம் உள்ளிட்ட பல்வேறு போராட்  டங்களை நடத்த தீர்மானித்துள் ளோம்” என்றார். இந்த வேலைநிறுத்தத்திற்கு சிஐடியு, ஏஐடியுசி, தொமுச ஆகிய மத்திய தொழிற்சங்கங்கள் ஆதரவு அளித்துள்ளன. வங்கி அதிகாரிகளும் சகோதரத்துவ ஆதரவு தெரிவித்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.