tamilnadu

img

வங்கி ஊழியர்கள் நாடு முழுவதும் 2 நாள் வேலைநிறுத்தம்

சென்னை,ஜன.18- 12 அம்ச கோரிக்கைகளை வலி யுறுத்தி இம் மாதம் 31, பிப்ரவரி  1 ஆம் தேதிகளில் வங்கி ஊழி யர்கள் நாடு தழுவிய அளவில் 2 நாள் வேலை நிறுத்தம் செய்ய உள்ளனர். வங்கிகளை தனியார்மயமாக்க கூடாது. மற்ற வங்கிகளோடு இணைக்கக் கூடாது. வைப்புத் தொகைக்கான வட்டியை அதிக ரிக்க வேண்டும். வாராக் கடனை வசூலிக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இம் மாதம் 8 ஆம் தேதி வங்கி ஊழியர்கள் நாடு தழு விய வேலைநிறுத்தத்தில் ஈடு பட்டனர். 

இதில் அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்கம், இந்திய வங்கி கூட்டமைப்பு உள்பட 5 சங்கங்கள் பங்கேற்றன. இந்த நிலையில், வருகிற 31 ஆம்  தேதியும் பிப்ரவரி 1 தேதியும் வங்கி  ஊழியர்கள் இரண்டு நாட்கள் நாடு தழுவிய வேலை நிறுத்தம் செய்ய இருப்பதாக வங்கி ஊழியர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இதுகுறித்து வங்கி ஊழியர்கள் சங்கத்தினர் கூறியதாவது:- ஊதிய உயர்வு, வாரத்துக்கு 5 நாள் வேலை, புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், குடும்ப ஓய்வூதிய திட்டத்தில் மேம்பாடு, வங்கி அதிகாரிகளுக்கான வேலை நேரத்தை வரையறுத் தல் உள்பட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபட இருக்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.