கும்பகோணம், நவ.25- நவம்பர் 25- வன்முறை எதிர்ப்பு தினம் மற்றும் வன்முறை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் நவம்பர் 25 முதல் டிசம்பர் 4 வரை 10 நாட்கள் நடைபயண பிரச்சாரம் நடைபெறுகிறது. அதையொட்டி அனைத்திந்திய மாதர் சங்க தஞ்சை மாவட்டக்குழு சார்பில் மாவட்டச் செயலாளர் தமிழ்ச் செல்வி, மாவட்டத் தலைவர் கலைச் செல்வி, மாலதி, அறிவு ராணி உள்ளிட்ட 30 க்கும் மேற்பட்ட மாதர் சங்க நிர்வாகி கள் பிரச்சார நடைபயணம் துவங்கியது. கும்பகோணம் அருகே உள்ள தேவ னாஞ்சேரியில் மாதர் சங்க பொறுப்பா ளர் வசந்தி தலைமையில் மாலதி சங்க கொடியேற்றி, வன்முறையற்ற தமி ழகம் போதையற்ற தமிழகம் என்கிற முழக்கத்தோடு நடைபயண பிரச்சாரம் நடைபெற்றது. பிரச்சாரக் குழுவை சிபிஎம் குடந்தை ஒன்றியக்குழு சார்பில் உற்சா கத்துடன் வரவேற்றனர். சிபிஎம் மாவட்ட குழு உறுப்பினர் சி. நாகராஜன், ஒன்றிய செயலாளர் பி.ஜேசுதாஸ், ஒன்றியக் குழு உறுப்பினர் குருசாமி, கணேசன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.