கிருஷ்ணகிரி, டிச.1- ஓசூர் ரயில் நிலையம் அருகில் தாலுகா அலுவலக சாலையில் சுரங்கப்பாதை உள்ளது. இது நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ரயில் பாதையின் கீழ் அமைக்கப் பட்டதாகும். அன்று முதலே மழை பெய்தாலே இரண்டடிக்கு மேல் தண்ணீர் தேங்கி பல நாட்கள் நிற்கும். தண்ணீர் வடிவதற்கான கால்வாய் சாலையிலிருந்து ஒரு அடிக்கு மேலே உள்ளது. மேலும் கால்வாயில் சேரும் சகதியும் படிந்து மேடாகவும் உள்ளதால் தண்ணீர் செல்லவே வழியில்லாமல் எப்போதும் தேங்கி நிற்பதால் சாலை பெயர்ந்து குண்டும் குழியு மாகவும் உள்ளது. வாகன ஓட்டிகளுக்கு கடும் சிரமம் ஏற்படுவதுடன், போக்கு வரத்து நெருக்கடியும், விபத்தும் ஏற்படுகி றது.அனைவர் மீதும் சேறும் சகதியுமாகிவிடுகிறது. எனவே இப்போதாவது தேங்கும் மழை நீர் உடனடியாக கால்வாய் வழியே வெளியேர சாலையை உயர்த்தி திப்போட வேண்டும், கால்வாயில் படிந்துள்ள மண், கழிவுகளை எடுத்தது.பாலத்தின் இருபுரமும் பல இடங்களில் சேதமடை ந்துள்ள சாலையையும் சீர்படுத்த சாராட்சியரும், மாநகர ஆணையாரும் தலை யிட்டு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சி ஓசூர் வட்டச் செயலாளர் பி.ஜி.மூர்த்தி வலியுறுத்தியுள்ளார்.