கிருஷ்ணகிரி, பிப்.24- மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தின உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.பெண்குழந்தைகள் மீது மக்கள் அனைவ ரும் சாதி, மத, இன, மொழி, சமூக பொருளா தார பாகுபாடு காட்டாமலும், உடல், மன ரீதி யாக பாதிக்காமலும் நடந்து கொள்ளவும், அவர்கள் மீதான அச்சுறுத்தல்கள், வன்முறை களை ஏற்படுத்தப்படாமல் தடுப்பதற்கும், அவர்கள் வளர்ச்சிக்கும், பாதுகாப்பிற்கும் பங்களித்திடவும், குழந்தை திருமணத்தை தடுத்திடவும், குழந்தை தொழிலாளர் இல்லாத சமூகத்தை உருவாக்கவும், இந்திய அரசிய லமைப்புச் சட்டம், ஐக்கிய நாடுகள் சபை யின் குழந்தைகள் உரிமைகள் மீதான உடன் படிக்கை வழங்கியுள்ள படி அனைத்து உரிமை களும் பாகுபாடில்லாமல் அனைத்து குழந்தை களுக்கும் கிடைத்திட ஒவ்வொருவரும் செயல் பட வேண்டும் என உறுதி மொழி ஏற்றனர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலு வலர், மக்கள் தொடர்பு அதிகாரிகள் பெண் அலுவலர்கள், ஊழியர்கள், காவல் துறை அதிகாரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.