districts

img

வெண்புள்ளிகள் விழிப்புணர்வுக்கான உறுதிமொழி ஏற்பு

திருப்பத்தூர், ஆக.4- தமிழ்நாடு அறிவி யல் இயக்கம் சார்பில் வெண்புள்ளிகள் விழிப்பு ணர்வுக்கான பதாகை வழங்குதல் மற்றும் உறுதி மொழி ஏற்கும் நிகழ்ச்சி  திருப்பத்தூர் அரசு மீனாட்சி மகளிர் மேல் நிலைப் பள்ளியில் வியாழ னன்று(ஆக.4) நடை பெற்றது. ஒருங்கிணைந்த கல்வி மாவட்ட உதவி திட்ட அலுவலர் பிர பாகரன் விழிப்புணர்வு நிகழ்ச்சியைத் துவக்கி வைத்து, பதாகைகளை மாணவர்களுக்கு வழங்கி, உறுதிமொழியை வாசித்தார். லுக்கோடெர்மா அல்லது விட்டிலிகோவை  வெண்புள்ளிகள் என்றே அழைக்க வேண்டும். வெண்குஷ்டம் என்று தவறாக  அழைப்பதை தமிழக அரசு தடை செய்து அரசாணை வெளி யிட்டுள்ளது. வெண்புள்ளி கள் உள்ள மாணவர்களை பள்ளி கல்லூரிகளில் சேர்க்கை செய்ய மறுத்தல் கூடாது அவ்வாறு மறுத்தால் கடுமையான நட வடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு அறி வித்துள்ளது. வெண்புள்ளிகள் என்பது ஒரு நோய் அல்ல. பிறருக்குத் தொற்றாது. பரம்பரை பரம்பரை யாக வராது உள்ளிட்ட தக வல்களுடன் வெண்புள்ளி கள் விழிப்புணர்வு பெற்ற முதல் மாநில மாக தமிழ்நாட்டை உரு வாக்குவேன் என உறுதி அளிக்கிறேன் என்றவாறு உள்ள உறுதி மொழியை மாவட்ட உதவி திட்ட அலு வலர் வாசிக்க அவரைப் தொடர்ந்து அனைவரும் உறுதிமொழி ஏற்றனர். இந்நிகழ்ச்சிக்கு அறிவியல் இயக்கத்தின் மாவட்ட கவுரவத் தலைவர் அச்சுதன் தலைமை வகித்தார். பள்ளியின் தலைமை ஆசிரியர் செல்வி வரவேற்றார். மாவட்ட துணைத் தலை வர் துரைமணி, மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கி ணைப்பாளர் இளவரசி ஆகி யோர் முன்னிலை வகித்த னர். மாவட்ட துணைச் செய லாளர் செண்பகவல்லி நன்றி கூறினார். மாவட்டச் செயலாளர் மாணிக்க மணிராஜ் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.