மதுரை, ஜன.29- இந்தியாவை பாதுகாப்போம், தொழிலாளர் -விவசாயிகள் உரி மைகளை பாதுகாப்போம் என்று கூறி மதுரை மாநகர் அனைத்துத் தொழிற் சங்க கூட்டமைப்பு சார்பில் நேதாஜி சிலை முன்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு சிஐடியு மாவட்டச் செய லாளர் ஆர்.தெய்வராஜ் தலைமை வகித்தார். கூட்டமைப்பு சங்க மாநில, மாவட்ட நிர்வாகிகள் வி. பாதர் வெள்ளை, தொமுச சி.கருணாநிதி, எம்எல்எப் மகபூப்ஜான், ஐஎன்டியுசி கே.ராஜசேகரன், எஸ்டிடியு சிக்கந்தர், ஏஏஎல்எல்எப் சரவணன், சிஐடியு வி. பிச்சை, இரா.லெனின், எம்.பாலசுப்பிர மணியன், ஜே.லூர்துரூபி, பா.பழனி யம்மாள், எஸ்.சந்தியாகு, ஜி.மோகன், எம்.சிவபெருமாள், சி.சுப்பையா உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர்.
இராமநாதபுரம்
இராமநாதபுரத்தில் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு எல்.பி.எஃப் மாவட்டச் செயலாளர் வின்சென்ட் அமலதாஸ் தலைமை வகித்தார். வழிவிடுமுருகன் கோவிலில் இருந்து இரு சக்கர வாகன பேரணி தேசிய கொடியுடன் துவங்கி அரண்மனையில் தேசியக் கொடி ஏற்றம் மற்றும் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. தேசிய கொடியை ஏற்றி வைத்து உறுதிமொழியை சிஐடியு மாவட்ட செயலாளர் எம்.சிவாஜி வாசித்தார். இந்நிகழ்ச்சியில், சிஐடியு மாவட்ட நிர்வாகிகள் எஸ்.ஏ.சந்தானம், ஏ. சுடலைகாசி, வி.பாஸ்கரன் எம்.மாலை ராஜன், சாலைப் போக்குவரத்து மாவட்ட செயலாளர் ஆனந்த், மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாவட்ட செயலாளர் காசிநாதன், டாஸ்மாக் ஊழியர் சங்க மாவட்ட பொருளாளர் பால்ராஜ், லோடுமேன் சங்க மாவட்ட தலைவர் பூமிநாதன், கட்டு மான சங்க மாவட்ட தலைவர் வாசு தேவன், ஆட்டோ சங்கர் மாவட்ட பொருளாளர் ரமேஷ், அரசு போக்கு வரத்து நகர் கிளை செயலாளர் துரைப்பாண்டி, எல்பிஎஃப் சார்பில் மாவட்ட தலைவர் காஞ்சி, ராஜா, துரை ராஜ் எல்ஐசி கிளைச் செயலாளர் முத்துப்பாண்டி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மாணவர் சங்கம்
இராமநாதபுரம் மாவட்டம் பர மக்குடி இந்திய மாணவர் சங்க தாலுகா குழு சார்பில் குடியரசு தின விழா உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி தாலுகா குழு உறுப்பினர் டி.எஸ்.பாலா தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட செயலாளர் எம்.வசந்த், சுர்ஜித் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.