பெரம்பலூர், ஜன.29 - ஜனவரி 30 மகாத்மா காந்தி நினைவு தினத்தை முன்னிட்டு அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் வெள்ளி யன்று பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் காந்தி சிலை முன்பு உறுதி மொழி எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற் றது. விதொச பெரம்பலூர் மாவட்ட செயலாளர் பி.ரமேஷ் தலைமை வகித்தார். விதொச மாநில செயலாளர் ஏ.லாசர், மாநில பொதுச் செயலாளர் வீ.அமர்தலிங்கம், பொரு ளாளர் எஸ்.சங்கர், மாநில செயலாளர்கள் கே.பக்கிரி சாமி, எ.பழநிசாமி, மாநிலக் குழு உறுப்பினர் சந்திரன், சிபிஎம் அரியலூர் மாவட்ட செயலாளர் எம்.இளங்கோ வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அகில இந்திய பொதுச் செயலாளர் பி.வெங்கட் தலைமையில் உறுதிமொழி ஏற்ற னர்.
‘இந்திய குடியரசை பாதுகாப்போம்; அரசிய லமைப்பு சட்டத்தை பாதுகாப் போம்; பிளவுபடுத்தும் மத வெறி சக்திகளை வீழ்த்து வோம்; ஊரகவேலை வாய்ப்பு திட்டத்தை சீர ழிக்கும் ஒன்றிய பாஜக அரசு முயற்சிகளுக்கு எதிராக கிராமப்புற மக்களை ஒன்று திரட்டுவோம்; பிப்ரவரி 23, 24 அன்று நடைபெற இருக்கும் பொது வேலை நிறுத்தத்தை முழு வெற்றி பெற செய்வோம்” உள்பட பல்வேறு கோரிக்கைகளை உறுதி மொழியாக ஏற்றனர். சிஐடியு மாவட்டச் செய லாளர் எஸ்.அகஸ்டின், மாவட்ட செயற்குழு எ.கலை யரசி ஆர்.கோகுல கிருஷ்ணன், ரெங்கநாதன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். மயிலாடுதுறை மகாத்மா காந்தியடி களின் நினைவு தினத்தை யொட்டி மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ் தலை மையில் தீண்டாமை ஒழிப்பு விழிப்புணர்வு உறுதி மொழியை அரசு அலுவ லர்கள் ஏற்றுக்கொள்ளும் நிகழ்ச்சி நடைபெற்றது. சமூக பாதுகாப்பு தனித் துணை ஆட்சியர் வாசுதேவன், மாவட்ட ஆட்சியர் அலுவ லக மேலாளர் சங்கர் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.