கொல்கத்தா:
மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்தவர், பிரபல சின்னத்திரை நடிகை சுபத்ரா முகர்ஜி. கடந்த 2013-ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்தஇவர், தில்லி வன்முறைச் சம்பவங்களைத் தொடர்ந்து, பாஜக-விலிருந்துவிலகுவதாக அறிவித்துள்ளார்.இதுதொடர்பாக சுபத்ரா முகர்ஜிஅறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
“மதத்தால் மக்களைப் பிரித்து,வெறுப்புணர்வை விதைக்கும் நோக்கிலேயே பாஜக செயல்படுகிறது. அதுவே பாஜகவின் சித்தாந்தமாக மாறியதாக உணர்கிறேன்.தற்போது கூட தில்லியில் நிறைய அப்பாவிகள் கொல்லப்பட்டுள்ளனர். பலரது வீடுகள் சூறையாடப்பட்டுள்ளன. கலவரம் மூலம் மக்களைப் பிளவுபடுத்தியுள்ளனர். அதற்குக் காரணம் பாஜகவைச் சேர்ந்த கபில் மிஸ்ரா, அனுராக் தாக்குர் உள்ளிட்டோரின் வெறுப்பூட்டக் கூடிய பேச்சுக்கள்தான். ஆனாலும் அவர்கள் மீது, பாஜக எந்த
வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தில்லி கலவரம் என்னை நிலைகுலையச் செய்தது. வெறுப்பு பேச்சுகளால் ஆதாயம் தேடியவர்கள் மீதுநடவடிக்கை எடுக்காத கட்சியில் இனி இருக்கமாட்டேன். அவர்கள்இருக்கும் கட்சியில் இருக்கக் கூடாது என முடிவெடித்து எனது ராஜினாமா முடிவை தற்போது கையில் எடுத்துள்ளேன்.” இவ்வாறு சுபத்ரா முகர்ஜி கூறியுள்ளார்.