திருவனந்தபுரம், அக்.24- இடைத்தேர்தலில் எல்டிஎப் பெற்றுள்ளது மிளிரும் வெற்றி என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கேரள மாநில செயலாளர் கொடியேரி பாலகிருஷ்ணன் தெரிவித்தார். இடைத்தேர்தல் முடிவுகள் குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: வட்டியூர்காவிலும், கோந்நி யிலும் எல்டிஎப் பெரும் வாக்கு வித்தி யாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இடைத்தேர்தல் நடந்த 5 சட்டமன்ற தொகுதிகளிலும், மக்களவைத் தேர்தலின்போது யுடிஎப் முன்னிலை பெற்றிருந்தது. அதில் இரண்டு இடங்களில் இத்தனை பெரிய வெற்றி எல்டிஎப்புக்கு கிடைத்துள்ளது. அரூரில் தோல்வி அடைந்தது இந்த ஒளியை மங்கச்செய்வதாகும். தோல்விக்கான காரணங்கள் குறித்து தனியாக ஆய்வு செய்யப்படும். இடைத்தேர்தல் அளிக்கும் செய்தி மாநிலத்தில் இடதுசாரிகள் பெரும் முன்னேற்றம் கண்டுள்ளனர் என்ப தாகும். கடந்த தேர்தல்களில் மூன்றாம் இடத்திற்கு சென்ற வட்டியூர்காவிலும், தொகுதி அமைக்கப்பட்ட திலிருந்து இடதுசாரிகள் வெற்றி பெறாத கோந்நியிலும் பெரும் வெற்றி அதனால்தான் கிடைத்துள்ளது. மக்களவைத் தேர்தல் நேரத்தில் நிலவிய அரசியல் சூழல் மாறி யிருக்கிறது. தேர்தலில் மக்கள் அளித் திருக்கும் தீர்ப்பு கேரளத்தில் உள்ள மக்கள்நல அரசுக்கான அங்கீகார மும் ஆகும். அரசின் வளர்ச்சி பணி களில் எதிர்க்கட்சியினர் காட்டும் காழ்ப்புணர்ச்சிக்கு எதிரான மக்களின் பதிலுமாகும். மாநிலத்தில் மதச்சார் பற்ற ஜனநாயக சக்திகளின் அடித்தளம் திடமானது என்பதையே மக்கள் தீர்ப்பு உறுதிப்படுத்துகிறது. ஆர்எஸ்எஸ்க்கு கேரளத்தில் இடமில்லை. விந்திய மலைக்கு கீழ் ஆர்எஸ்எஸ்க்கு ஒரு ஆட்சி சாத்திய மில்லை என்பதை கேரளம் மீண்டும் ஒருமுறை பிரகடனம் செய்திருக் கிறது. கோந்நியிலும் வட்டியூர்கா விலும் அவர்களுக்கு பெரும் பின்னடை வாகும். யுடிஎப்புக்கும் தேர்தல் முடிவு பலத்த அடியாகும். சாதி மத சக்திகள் அரசியலில் ஈடுபடுவதற்கு எதிரான மக்களது மனநிலையும் தேர்தலில் பிரதிபலித்தது. சில அரசியல் கட்சிகள் கருதுவது சில சமுதாய அமைப்புகளை உடன் வைத்துக்கொண்டால் எதுவும் சாத்தியம் என்பதாகும். அவர்களது கணிப்புகள் தவறானது என்பதே மக்கள் தீர்ப்பு. மக்கள் தீர்ப்பை ஏற்றுக்கொண்டு மேலும் அதிகமான மக்கள் நல செயல்பாடுகளுக்கு இந்த தீர்ப்பு வலு சேர்க்கும். சிபிஎம் செயல்பாடுகள் மேலும் தீவிரமாகும். மக்கள் எதிர்பார்ப்புடன் இடதுசாரிகளை பார்க்கிறார்கள். மக்கள் தீர்ப்பு இடதுசாரி ஊழியர்களை கூடுதல் பணிவுடன் செயல்பட வைக்கும். மேலும் அதிகமாக மக்களிடம் சென்று பணியாற்ற வேண்டும். இது கேரளத்தின் ஜனநாயக மதச்சார்பற்ற சக்திகளின் வெற்றி எனவும் கொடியேரி பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.