states

img

கோவிட் காலத்திலும் கார்ப்பரேட் நலன்களுக்காக மோடியின் அறிவிக்கப்படாத அவசர நிலை... கொடியேரி பாலகிருஷ்ணன் பேச்சு....

திருவனந்தபுரம்:
இந்திரா காந்தி அவசரகால நிலையை அறிவித்தார் என்றால், நரேந்திர மோடி அமல்படுத்துவது அறிவிக்கப்படாத அவசரகால நிலை என்று சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் கொடியேரி பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

அவசரகால நிலை பிரகடனத்தின் 46 ஆவது ஆண்டு நினைவு நிகழ்ச்சியில் அவர் மேலும் பேசியதாவது: மத்திய அரசின் சர்வாதிகார போக்குகளுக்கு எதிராக பல்வேறு பகுதிகளிலிருந்து போராட்டங்கள் அதிகரித்து வருகின்றன. விவசாயிகள், மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் அனைவரும் இந்தக் கொள்கைக்கு எதிராக போராட்டம் நடத்துகின்றனர்.கோவிட் சகாப்தத்தில் கூட, கார்ப்பரேட்நிறுவனங்களின் நலன்களை பாதுகாப்பதில் ஆர்வம் காட்டப்படுகிறது. இந்திரா காந்தி அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங் களையும் காங்கிரசின் உள் பிரச்சனைகளை யும் சமாளிக்க அவசரகால நிலையை அறிவித்தார்.

சட்ட அமைப்பு சிதைந்து போராட்டக்காரர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். சிவில் உரிமைகளை அப்பட்டமாக மீறுவது கேரளத்திலும் நடந்தது. ‘அவசரநிலை அரபிக்கடலில்’ என்ற முழக்கம் அதற்கு எதிராக எழுந்தது.அந்த அவசரநிலை காலத்தை ஒத்த சூழ்நிலையை மோடி அரசு உருவாக்கி யுள்ளது. அதற்கு எதிராக போராட்டங்களும் எதிர்வினைகளும் அதிகரித்து வருகின்றன. இதன் ஒரு பகுதியே கேரள சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் காட்டிய விழிப்புணர்வு. நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் போராட்டங்கள் தீவிரமடையும் என்று அவர் கூறினார்.