திருவனந்தபுரம்:
கொரோனா இல்லை எனசான்று பெறச்சென்ற பெண்ணை தனது வீட்டில் கட்டி வைத்து பாலியல் வல் லுறவு செய்த இளநிலை சுகாதார ஆய்வாளரை பணியிலிருந்து இடைநீக்கம் செய்யசுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.சைலஜா உத்தரவிட்டார். கல்லரா பங்கோடு பகுதியைச் சேர்ந்த இளநிலை சுகாதார ஆய்வாளர் பிரதீப், புகாரின் பேரில் போலீசாரால் கைது செய்யப்பட்டார். கொல்லம் குழத்துப்புழாவைச் சேர்ந்த50 வயது பெண் ஒருவர் இவர் மீது பாலியல் வல்லுறவுபுகாரை வெள்ளரடா காவல்நிலையத்தில் அளித்திருந் தார். இதையடுத்து, பரதன்னூர் சமூக சுகாதார மையத்தில் பணியாற்றிவந்த சுகாதார ஊழியர் பிரதீப் மீதுவழக்கு பதிவு செய்தனர். தன்னை ஒரு நாள் முழுவதும் வீட்டில் கட்டிவைத்து பாலியல் சித்திரவதைக்கு உள்ளாக்கியதாக அந்த பெண் சாட்சியமளித்தார். அதைத் தொடர்ந்து பரதன்னூரில் உள்ள பிரதீப்பின் வீட் டுக்கு அழைத்துச் சென்றுசான்றுகளை காவல்துறையினர் சேகரித்தனர்.