திருவனந்தபுரம்:
கேரளத்தில் 88 லட்சம் குடும்பங்களுக்கு கோவிட் கால நிவாரணமாக மேலும் 4 மாதங்களுக்கு உணவுப் பொருட்கள் அடங்கிய பைகள் வழங்க அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. கேரள முதல்வர் பினராயி விஜயன் அரசின் ஓணம் பரிசாக 100 நாட்களில் 100 திட்டங்கள் என்கிற வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக டிசம்பர் வரையிலான மேலும் நான்கு மாதங்களுக்கு 11 அத்தியாவசிய பொருட்களைக் கொண்ட பைகள் விநியோகிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 88 லட்சம் குடும்பங்களுக்கு இவை வழங்கப்படும். இதற்கு ரூ.1800 கோடி கூடுதல் செலவு செய்யப்படும்.
ஏற்கனவே, ஓணம் பண்டிகைக்கு முன்னதாக ஆகஸ்ட் மாதம் இதுபோன்ற உணவுப் பொருட்கள் கொண்ட பைகள் வழங்கப்பட்டன. உணவு பொருட்கள் கொண்ட பைகளும் ரூ.1,400 நல ஓய்வூதியம் ஆகியவற்றின் மூலம், கோவிட் நோய் தொற்று காலத்தில் கேரளத்தில் யாரும் பட்டினியில் இல்லை என்கிற நிலைமையை அரசு உறுதி செய்துள்ளது. ஏற்கனவே இடது ஜனநாயக முன்னணி மக்களுக்கு அளித்த தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தையும் எல்டிஎப் அரசு நிறைவேற்றியது. தற்போது கோவிட் கால அறிவிப்புகளையும் அரசு நிறைவேற்றி வருகிறது