திருவனந்தபுரம்:
கேரள மாநிலத்தின் புனரமைப்பு பணிகளை குறிக்கோளாக கொண்ட செயல்பாடு களின் முக்கிய நிகழ்வாக கோவளத்தில் நடந்த கேரள வளர்ச்சிப்பணிகளுக்கு உதவும் சர்வதேச அளவிலான கொடை யாளர் சங்கமம் எதிர்பார்த்ததைவிட பெரும்வெற்றி பெற்றுள்ளது என கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார்.
பெருவெள்ள பாதிப்புகளிலிருந்து கேரளத்தை மீட்கும் புனரமைப்பில் உலக வங்கி பங்கேற்க உள்ளதாக கூட்டத்தில் பங்கேற்ற உலக வங்கி பிரதிநிதி ஜுனைத் அகமது அறிவித்ததாகவும் முதல்வர் தெரிவித்தார். செவ்வாயன்று திருவனந்தபுரத்தில் நடந்த செய்தியாளர்கள் கூட்டத்தில் அவர் மேலும் கூறியதாவது:முழுமையான பேரிடர் மேலாண்மை இயக்கம் ஒன்றை துவக்குவது இந்த திட்டத்தின் நோக்கம். பெருவெள்ளத்திற்கு பிந்தைய நடவடிக்கைகள் அனைத்தும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. இதற்குமேல்என்ன செய்ய முடியும் என்பது குறித்தும்விவாதத்தின் அடிப்படையில் முடிவு செய்ய ப்பட்டது. முழுமையான வாய்ப்புகளை தெரிந்துகொள்ளவும் அவற்றைப் பெறவும் மாநிலம் தயாராக வேண்டும் என்பதை வளர்ச்சிக்கான சங்கமம் முன்வைத்துள்ளது.
உலக வங்கியின் பங்கேற்பு
திட்டத்தின் சாதாரண பங்கேற்பாளர் என்பதைவிட ‘வளர்ச்சியின் கூட்டாளி’ என்கிற நிலையில் உலக வங்கி கேரளபுனரமைப்பில் உதவுவதாக அறிவித்துள்ளது.அண்மைக் காலத்தில் இத்தகைய நிலை பாட்டை உலக வங்கி மேற்கொண்டதில்லை. ஏடிபி, ஜேஐசிஏ, கேஎப்டபிள்யு, புதிய வளர்ச்சி வங்கி (நியு டெவலப்மென்ட் பாங்க்) உள்ளிட்டவை புனரமைப்புக்கு உதவுவ தாக வாக்குறுதி அளித்துள்ளன. நகரங் களுக்கான நீர் விநியோகம் மற்றும் சாலை கள் அமைப்புக்கு உதவுவதாக நபார்டு, அட்கோ போன்ற முகமைகள் அறிவித்தன. டாடா டிரஸ்ட், பில்கேட்ஸ் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை, ஐஎப்டிசி அறக்கட்டளை போன்றவை சிறப்புத் திட்டங்களுக்கு உதவுவதாகவும் பல்வேறு துறைகளில் திறன் மேம்பாட்டுக்கு துணை புரிவதாகவும் அறிவித்தன. “ரீபில்டு கேரளா” திட்டத்தின் வளர்ச்சிக்கான தலையீடுகள் குறித்து முதல்வர் என்கிற நிலையில் கூட்டத்தில் பேசினேன். நீண்டகால வளர்ச்சிக்கான திட்டமான ‘ரீபில்டு கேரளா’ மூலம் அடிப்படையான சீர்திருத்த ங்கள் மற்றும் புதுமையான அணுகுமுறை உள்ளடக்கிய வளர்ச்சியில் மேம்பட்ட பார்வையை முன்னிறுத்த வேண்டும்.இவ்வாறு முதல்வர் கூறினார்.