திருவனந்தபுரம், டிச.29- சனியன்று கண்ணூர் பல்கலை கழக த்தில் கேரள ஆளுநர் ஆரிப் முகமதுகான் இந்திய வரலாற்று காங்கிரசை துவக்கி வை த்து பேசுகையில் குடியுரிமை திருத்த சட்ட த்துக்கு ஆதரவான கருத்துகளை தெரிவி த்தார். இதற்கு மாணவர்கள் மற்றும் பேரா சிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இது குறித்து கருத்து தெரி வித்த கேரள சபாநாயகர் பி.ஸ்ரீராமகிருஷ்ணன் யாராக இருந்தா லும் தகுதி அறிந்து பேச வேண்டும் என்று கூறினார். இதற்கு முன்பு எப்போதும் ராணுவ அதிகாரிகள் அரசி யல் விமர்சனங்களை முன்வைத்ததில்லை. இப்போது முத ன்முறையாக அது நடந்துள்ளது. அரசமைப்பு சாசனத்தின் நூலிழைகளை அறுத்தெறியும் இத்தகைய நிலைப்பாடுகள் நாட்டுக்கு நல்லதல்ல. அரசமைப்பு சாசனத்திற்கு உட்பட்டு அனைவரும் செயல்பட வேண்டும் என அவர் தெரிவித்தார்.