திருவனந்தபுரம், ஜுலை 30- தீரமிக்க புரட்சியாளன் செகுவேரா வின் மகள் டாக்டர் அலைடா குவேரா வுடனான சந்திப்பு மிகுந்த ஆவேசத்தை அளித்ததாக கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறி னார். சுற்றுலாவுக்காக கேரளா வந்துள்ள அலைடா திங்களன்று முதல்வர் பினராயி விஜயனை சந்தித்தார். அப்போது சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் எம்.ஏ.பேபி உடனிருந்தார். கியூபா பய ணம் குறித்தும் கியூபா ஒருமைப்பாடு மாநாடு குறித்தும் சுமார் அரை மணி நேரம் அவர்கள் உரையாடினர். 1994இல், தான் கியூபாவில் கியூப ஒருமைப்பாடு மாநாட்டில் பங்கேற்ற தருணத்தில் கூத்துப்பரம்பில் துப்பாக்கிச் சூடு நடந்ததை எம்.ஏ.பேபி நினைவு கூர்ந்தார். அந்த மாநாட்டில் தானும் பங்கேற்றதாக அலைடா கூறினார். கேரளத்தின் இயற்கை அமைப்பு அழகானது என ஏற்கனவே கேரளம் வந்தபோது கிடைத்த அனுபவத்தை அவர் பகிர்ந்து கொண்டார். செகுவேராவின் குடும்பத்தைக் குறித்து விசாரித்த முதல்வர் தனது குடும்பத்தினரை அறிமுகப்படுத்தி அவருடன் மதிய உணவருந்தினார். கண்ணூரிலும் எர்ணாகுளத்திலும் நடைபெற உள்ள கியூபா ஒருமைப்பாடு மாநாடுகளில் அலைடா பங்கேற்க உள்ளார். கேரளத்தில் நடக்கும் பொது நிகழ்ச்சியில் பங்கேற்பது மகிழ்ச்சி அளிப்பதாக அலைடா கூறினார்.