tamilnadu

img

காசர்கோடு மாவட்டத்தில் நோயாளிகள் யாரும் இல்லை குணமடைந்தோர் 178 பேர்

காசர்கோடு, மே 11- மரணத்தின் பிடியில் எவரும் சிக்கிவிடாமல் மிகுந்த கவ னத்துடன் கோவிட் நோயாளி களுக்கு சிகிச்சை அளித்து குணப்படுத்திய மாவட்டமாக காசர்கோடு விளங்குகிறது. 178 பேர் சிகிச்சை அளித்து மீட்கப் பட்டனர். கடைசி நோயாளியையும் குணப்படுத்தி கோவிட் இல்லாத மாவட்டமாக காசர்கோடு உள் ளது. நோய் கண்டறியப்பட்டதில் வெளிநாடுகளிலிருந்து வந்த வர்கள் 108 பேர், தொடர்புவழி தொற்று ஏற்பட்டவர்கள் 70 பேர். காசர்கோடு மாவட்ட மருத்துவ மனையில் 43 பேர், பொது மருத்து வமனையில் 89 பேர், காசர் கோடு மருத்துவக் கல்லூரியில் 24 பேர் சிகிச்சை பெற்றனர். பரி யாரம் மருத்துவக் கல்லூரியில் 20 பேரையும், கோழிக்கோடு மருத்துவக் கல்லூியில் இரு வரையும் சிகிச்சை அளித்து மீட் டுள்ளனர்.

சிறப்பான சிகிச்சை அளித்து அனைவரையும் நோயிலிருந்து விடுவித்த கேரளத்தின் பெரு மைக்குரிய மருத்துவர்கள் மற் றும் செவிலியர்கள் உட்பட அனைத்து சுகாதாரப் பணியா ளர்களுக்கும், ஐ.டி.எஸ்.பி அலகு, என்.எச்.எம் திருவனந்த புரம், கோட்டயம் மற்றும் ஆலப் புழா மருத்துவக் கல்லூரிகளின் குழுக்களுக்கு சுகாதார அமைச் சர் கே.கே.சைலஜா நன்றி தெரி வித்தார். மற்ற நாடுகளிலிருந் தும் மாநிலங்களிலிந்தும் கோவிட் தொற்றுடன் சிலர் வருவதால் இதே எச்சரிக்கையை கவனத்து டன் தொடர வேண்டும் எனவும் அமைச்சர் கேட்டுக்கொண்டார். 

ரூ.10.7 கோடி ஒதுக்கீடு
கோவிட் தடுப்புக்காக மாநில பேரிடர் நிவாரண நிதியிலி ருந்து மாவட்டத்திற்கு ரூ.75 லட்சமும், கோவிட் தடுப்புக் கான தொகுப்பு திட்டத்திலி ருந்து ரூ.3.95 கோடியும் அனு மதிக்கப்பட்டது. காசர்கோடு மாவட்டம் ஒரு கட்டத்தில் கோவிட் நோயாளிகள் அதிகரித்து மிகு ந்த அச்சுறுத்தலை ஏற்படுத்தி யது. உடனடியாக காசர்கோடில் புதிதாக கட்டி முடிக்கப்பட்டுள்ள காசர்கோடு அரசு மருத்தவக் கல்லூரி கோவிட் சிறப்பு மரு த்துவமனையாக மாற்றப்பட் டது. அதற்காக ரூ.7 கோடி ஒதுக்கப்பட்டது. திருவனந்த புரத்திலிருந்து மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட மருத் துவ பணியாளர்கள் காசர்கோ டுக்கு அனுப்பி வைக்கப்பட்ட னர். மே 3 முதல் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட தைத் தொடர்ந்து மாவட்ட எல் லைகளில் இதர மாநில, மாவட் டங்களில் இருந்து வருகிற வர்களிடம் மருத்துவ பரிசோதனை நடத்தப்படுகிறது. தலப்பாடி, காலிக்கடவு ஆகிய இடங் களில் இதற்கான விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட் டுள்ளன. இந்த முகாம்களில் 24 மணி நேரமும் மருத்துவக்குழு செயல்பட்டு வருகிறது.