tamilnadu

img

கேரளத்தில் தொடரும் கனமழை 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சுநிற எச்சரிக்கை

கொச்சி, ஜுலை 30- கேரளத்தில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. 5 மாவட்டங்க ளுக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ள நிலையில் ஆகஸ்ட் 20 வரை கேர ளத்தில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.      மலப்புறம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர், காசர்கோடு மாவட்டங்களுக்கு ஆரஞ்சுநிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள் ளது. மேலும், ஆலப்புழா, கோட்டயம், எர்ணா குளம், திரிச்சூர், பாலக்காடு மாவட்டங்க ளுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் அறிவிக்கப் பட்டுள்ளது. கன மழை காரணமாக கடற்கரை களில் உயரமான அலைகளுக்கும், பல மான காற்றுக்கும் வாய்ப்புள்ளது. கடல் அரிப்பு ஏற்படவும் வாய்ப்புள்ளது. எனவே, கேரள கடற்கரையில் இருந்து மீன் தொழிலா ளர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என் கிற முன்னெச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.  

பொதுமக்களும் அரசு அமைப்புகளும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என மாநில பேரிடர் நிவாரண ஆணையம் உத்த ரவு பிறப்பித்துள்ளது. நதிக்கரைகளிலும் தாழ்வான பகுதிகளிலும் மலையோர பகுதி களிலும் வசிப்போரும், மண்சரிவு அச்சுறுத் தல் உள்ள பகுதிகளில் வசிப்போரும் தனி கவனம் செலுத்த வேண்டும். மாநிலத்தின் சில மாவட்டங்களில் காலநிலை மோசமா வதைத் தொடர்ந்து எந்த அவசர நிலையை யும் எதிர்கொள்ள தயாராக இருக்குமாறு காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட் டுள்ளதாக மாநில காவல்துறை தலைவர் லோக்நாத் பெஹ்ரா அறிவித்தார். புத னன்று பெய்த மழையால் தாழ்வான பகுதி களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.