திருவனந்தபுரம்:
கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா மாநிலங்களில் கொட்டித் தீர்க்கும்கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. கோழிக்கோடு, எர்ணாகுளம், வயநாடு மாவட்டங்களை வெள்ளம் மூழ்கடித்தது. தாழ்வான பகுதிகளில் இருந்த 22 ஆயிரம் பேர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கொச்சி விமான நிலையம் மூடப்பட்டது.
தென் மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால், கேரளாவில் மிக கன மழை பெய்து வருகிறது. இடுக்கி, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு மாவட்டங்களில் ஒரு மணிநேரத்தில் 20 முதல் 24 சென்டி மீட்டருக்கு அதிகமாக மழை பெய்யக் கூடும் என்பதைக் குறிக்கும் வகையில் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் வியாழன் தொடங்கிஅந்த மாநிலத்தில் கனமழை வெளுத்து வாங்குகிறது. ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், ஊர்களுக்குள் தண்ணீர் பாய்ந்தோடுகிறது. எர்ணாகுளம் மாவட்டம் முவட்டுப்புழாவில் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது.
கோழிக்கோடு மாவட்டம் அரிகோடு நகரை வெள்ளம் சூழ்ந்தது. நகரில் இருக்கும் வீடுகள், கடைகள் நீரில் மூழ்கின. ஆலப்புழா மாவட்டம்,சக்குளத்தாக்காவு கோவிலை வெள்ளம் சூழ்ந்தது. கனமழை காரணமாக கேரளாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது. வெள்ளம், நிலச்சரிவு போன்ற காரணங்களால், சாலை மற்றும் ரயில்போக்குவரத்து முடங்கியது. வயநாட்டின் மேப்பாடியில் நிலச்சரிவில் சிக்கிய 60 பேர் மீட்கப்பட்டனர்.வெள்ளம் காரணமாக ச்சி விமான நிலையம் மூடப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை 3 மணிக்குப் பிறகேஅங்கு மீண்டும் செயல்பாடுகள் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக கேரளாவில் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் தாழ்வான பகுதிகளில் வசித்த22 ஆயிரத்து 165 பேர் மீட்கப்பட்டு, 315 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.அடுத்த இரு நாட்களுக்கு மழைதொடரும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளதால், ராணுவம் மற்றும் விமானப்படையின் உதவியை அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன்நாடியுள்ளார். வயநாடு மாவட்டம்கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதால்அந்தத்தொகுதியின் எம்.பியானராகுல் காந்தி,மக்களுக்கு தேவையான உதவிகளைச் செய்ய காங்கிரஸ் தலைவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
கர்நாடகம்
கர்நாடகாவில் விடாது பெய்யும் கனமழைக்கு 9 பேர் பலியாகினர். 51 தாலுகாக்களில் தாழ்வான பகுதிகளில் வசித்த 44 ஆயிரம் பேர் மீட்கப்பட்டனர். 272 முகாம்களில் மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பெல்காம்,பாகல்கோட், ராய்ச்சூர் மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. பிஜப்பூரில் சாலையை வெள்ளம் மூழ்கடித்தது. ராணுவ வீரர்கள் ஆயிரம் பேர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
மகாராஷ்டிரா
இதேபோல் மகாராஷ்டிராவில் இரு நாட்களாக கனமழை கொட்டித் தீர்க்கிறது. சங்லி, கோலாப்பூர், சடாரா மாவட்டங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. 70 ஆயிரம் பேர் இதுவரை மீட்கப்பட்டுள்ளனர். விமானப் படையினரும் மீட்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கோலாப்பூரில் வீடுகளின் மேற்கூரைகள் மட்டுமே தெரியும் அளவுக்கு வெள்ளம் சூழ்ந்துள்ளது. 3 ஆயிரத்து 800 வீடுகள் மூழ்கின. பைபர் படகுகள் மூலமாக மக்களைதேசிய பேரிடர் மீட்புப் படையினர் மீட்டு வருகின்றனர். பெரும்பாலான இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. நெடுஞ்சாலைகளை வெள்ளம் மூழ்கடித்ததால், வாகனப் போக்குவரத்து முடங்கியது. சொந்த ஊர்களுக்குச் செல்லும் பயணிகள் பேருந்துகளிலேயே காத்திருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
வட மாநிலங்களில் தொடரும் கனமழை
தென்மேற்குப் பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் சத்தீஸ்கர், ஒடிசா மாநிலங்களிலும் தொடர் கனமழை பெய்து வருகிறது. சத்தீஸ்கர் மாநிலத்தில் தொடர்கனமழை காரணமாக பல்வேறு முக்கிய சாலைகள் நீரில் மூழ்கியுள்ளன. சுக்மா மற்றும் பஸ்தார் மாவட்டங்களில் பல்வேறுசாலைகள் நீரில் மூழ்கியுள்ளதால்போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. சத்தீஸ்கர் - ஒடிசா மார்க்கம் உட்பட பல்வேறு மார்க்கங்களில் ரயில் தண்டவாளங்கள் நீரில் மூழ்கியுள்ளன. கடும் மழை வெள்ளத்தால் பஸ்தார் மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பீஜப்பூர் மாவட்டத்தில் உள்ள பைராம்கரில் கால்வாய் ஒன்றைக் கடந்துகொண்டிருந்த போது ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கிய 15 பேரை மீட்புக் குழுவினர் மீட்டனர்
ஒடிசா
ஒடிசா மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் தொடர் கனமழை பெய்து வரும் நிலையில் பல்வேறு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. குடியிருப்புகள், விளை நிலங்களை வெள்ளம் சூழ்ந்த நிலையில் மக்கள்வெள்ள நீருக்கிடையே பாதுகாப்பான இடங்களை தேடி வெளியேறுகின்றனர். ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்த நிலையில் தாழ்வான இடங்களில் உள்ள சாலைகள் பாலங்கள்வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. பல்வேறுமாவட்டங்களில் மாநில பேரிடர்மீட்புக் குழுவினர் மீட்புப் பணிகளைதீவிரப்படுத்தியுள்ளனர்.