கரூர், செப்.30-பொதுமக்களின் நலன் கருதி குறைந்த கட்டணத்தில் குளிர்சாதன வசதியுடன் கும்பகோணம் கோட்டம் மூலம் 10 பேருந்துகள் விரைவில் இயக்கப்படும். கரூரில் உள்ள பஸ் பாடி நிறுவனங்களில் பணி முடித்த அரசு பேருந்து களை பார்வையிட்ட பின் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கரூரில் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது: குறைந்த தூரத்தில் இயக்கும் இரண்டு மொப்ஷல் பேருந்துகள் திருவண்ணாமலை- சென்னை வழித்தடத்தில் இயக்கப்பட்டது. தற்போது கும்பகோணம் கோட்டத்தின் மூலம் 10 பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டு, திருச்சி- கோவை மார்க்கத்தில் 3 பேருந்துகள், திருச்சி- திருப்பூர் மார்க்கத்தில் 1 பேருந்து, கரூர்- கோவை 2 பேருந்துகள், கரூர்- மதுரை-இராமேஸ்வரம் வழித்தடத்தில் 1 பேருந்து, கரூர்- திருச்சி-இராமேஸ்வரம் வழித்தடத்தில் 2 பேருந்துகள், கரூர்- திருச்சி-புதுச்சேரிவரை 1 பேருந்து என மொத்தம் 10 பேருந்துகள் குறைந்த கட்டணத்தில் கிலோ மீட்டர் ஒன்றிற்கு ஒரு ரூபாய் வீதம் குளிர் சாதன வசதியுடன் இயக்கப்பட உள்ளதாக தெரிவித்த அவர், இத னால் பொதுமக்கள் தனியார் பேருந்துகளை பயன்படுத்து வதை விட்டு, அரசு பேருந்துகளில் பயணம் செய்ய வாய்ப்பு கள் இருக்கிறது. இதே போல் தமிழக அரசின் அனைத்து போக்குவரத்து கோட்டங்களிலும் முதல் கட்டமாக தலா 10 பேருந்து களை இயக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார். ஏற்கனவே நடைமுறையில் உள்ள இடைநில்லா பேருந்து கள் குறைந்த நேரத்தில் அதிக தூரம் இயக்கும் வகையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கு பொதுமக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என்று அவர் கூறினார்.