கரூர் அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த காவலர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
கரூர் அருகே வெங்கமேடு காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வரும் இளவரசன் (38), 16 வயது பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார். இதனை மாணவி அவரது தாயிடம் தெரிவித்துள்ளார்.
இதை தொடர்ந்து, மாணவியின் தாயார் குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலரிடம் இதுகுறித்து புகார் அளித்ததை தொடர்ந்து, கரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் அளித்த புகார் அளித்துள்ளார். இதன் பேரில் போலீசார் இளவரசன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்யப்பட்டு சிறையில் அடைத்துள்ளனர்.
ஏற்கனவே உதவி ஆய்வாளரை தாக்கிய வழக்கில் இளவரசன் பணி இடைநீக்கம் செய்யப்பட்டு மீண்டும் பணியில் சேர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.