கரூரில் 41 பேர் உயிரிழந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து சிபிஎம் பொதுச்செயலாளர் எம்.ஏ.பேபி மற்றும் கட்சியின் நிர்வாகிகள் ஆறுதல் தெரிவித்தனர்.
கடந்த செப்.27ஆம் தேதி கரூரில் நடைபெற்ற தவெக தலைவர் விஜயின் பரப்புரை கூட்டநெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். சம்பவ இடத்திற்கு பல்வேறு கட்சி தலைவர்கள் நேரில் சென்று இரங்கல்களையும் ஆறுதல்களையும் தெரிவித்துவருகின்றனர்.
அந்தவகையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன், ஆர்.சச்சிதானந்தம் எம்.பி, சின்னதுரை எம்.எல்.ஏ ஆகியோர் சம்பவம் நடந்த அன்று இரவே கரூர் சென்று பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்தனர்.
இந்நிலையில் சிபிஎம் பொதுச்செயலாளர் எம்.ஏ.பேபி கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரையும், காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பொதுமக்களையும் இன்று நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
அவருடன் சிபிஎம் நாடளுமன்ற உறுப்பினர்கள் ராதாகிருஷ்ணன், சிவதாசன், சச்சிதானந்தம், அரசியல் தலைமை குழு உறுப்பினர் வாசுகி, சட்டமன்ற உறுப்பினர் நாகைமாலி, மாநில குழு உறுப்பினர் பாலா ஆகியோர் உடனிருந்தனர்