கரூர், பிப்.2- தமிழ்நாடு கல்வித் துறை நிர்வாக அலு வலர்கள் சங்க கரூர் மாவட்ட 8வது, மாவட்ட மாநாடு உழவர் சந்தை சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. சங்கத்தின் மாவட்டத் தலைவர் பாண்டி கண்ணன் தலைமை வகித்தார். மாநில பொதுச்செயலாளர் பொன் ஜெயராம் மாநாட்டை துவக்கி வைத்து பேசினார். மாநிலத் தலைவர் அ.சேகர் சிறப்புரையாற்றினார். மாவட்ட செயலாளர் லட்சுமணன் வேலை அறிக்கையை முன் வைத்து பேசினர். அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலா ளர் கே.சக்திவேல், ஆய்வக நுட்பனர் சங்க மாநில செயலாளர் மு.செல்வராணி ஆகி யோர் பேசினார். நிர்வாகிகள் இளங்கோ, பாலசுப்ரமணியன், அறிவழகன், பிரேம் குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட னர். மாநில செயற்குழு உறுப்பினர் ரமேஷ் நன்றி கூறினார். ஜாக்டோ- ஜியோ போராட்டத்தில் பழிவாங்கும் நடவடிக்கையில் 5,800 க்கும் மேற்பட்ட அரசு ஊழியர், ஆசிரியர்கள் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கை திரும்பப் பெற வேண்டும். மாவட்ட கல்வி அலு வலகம், முதன்மை கல்வி அலுவலகம் உள்ளிட்ட அலுவலகங்களில் கூடுதல் பணி யிடங்களை உடனடியாக அனுமதி வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. புதிய மாவட்ட தலைவராக க.பாண்டி கண்ணன், செயலாளராக வ.கோபி, பொரு ளாளராக வ. ஸ்டாலின், துணைத் தலை வர்களாக ம.லெனின், கோ. லட்சுமணன், க.சிவா, இணைச் செயலாளர்களாக மேனகா, சித்ரா, பாலசுப்பிரமணி, மாநில செயற்குழு உறுப்பினராக ரமேஷ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.