tamilnadu

img

மோட்டார் வாகனச் சட்டத் திருத்தத்தை திரும்பப் பெறக் கோரிக்கை

மன்னார்குடி, செப்.11- மோட்டார் வாகன சட்டத் திருத்தத்தை உடனடியாக திரும்பப்பெற வேண்டும். நல வாரியத்தில் பதிவு செய்த ஆட்டோ தொழிலாளர்களக்கு மானிய விலையில் பெட்ரோல் டீசல் வழங்க வேண்டும் பெட்ரோல் டீசல் விலையை ஜிஎஸ்டி வரி விதிப்பு வரம்பிற்குள் கொண்டு வர வேண்டும் மன்னார்குடி அரசு மருத்துவமனைக்குள் காத்திருந்து நோயாளிகளை அழைத்துச் செல்ல ஆட்டோக்களுக்கு இடம் அளிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை தீர்மானங்கள் திருவாரூர் மாவட்ட ஆட்டோ தொழிலாளர் சங்கத்தின் மன்னார்குடி நகர 7 ஆம் ஆண்டு பேரவைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.  செவ்வாய்க்கிழமை ஏ.கே.ஆர் சித்தாம்பூர் திருமண மண்டபத்தில் அமைந்துள்ள தோழர் கே.நீலமேகம் நினைவரங்கத்தில் சங்கத்தின் பேரவைக் கூட்டம் நகரத் தலைவர் ஜே.ஆனந்த் தலைமையில் நடை பெற்றது. மாவட்ட துணைத் தலைவர் எ.மதியழகன் வரவேற்றார். நகர செயலாளர் எ.அரிகரன் முன் வைத்த வேலையறிக்கை திருத்தங்களு டன் ஏற்கப்பட்டது. சிஐடியு மாவட்ட செயலாளர் டி.முருகையன், மாவட்ட துணைத் தலைவர் ஜி.பழனிவேல், மாவட்ட பொருளாளர் எம்.பி.கே.பாண்டின், ஆட்டோ தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் எம்.கே.என். அனிபா, மாவட்ட தலைவர் ஏ.நபர, மாவட்ட பொருளாளர் பொன். ஆறுமுகம், சாலை போக்குவரத்து தொழிலாளர் சம்மேளன மாட்ட செய லாளர் ஏ.ஒன்.மணி உள்ளிட்டோர் வாழ்த்துரையாற்றினார்கள்.  நகர பொருளாளர் எஸ். சதீஷ் நன்றி கூறினார். முன்னதாக தேரடியிலி ருந்து ஆட்டோ தொழிலாளர் பேரணி புறப்பட்டு நகரின் முக்கிய வீதி களின் வழியாக பேரவை நடைபெறும் அரங்கத்திற்கு வந்தடைந்தவுடன் தமுஎகச மாவட்ட தலைவர் இரா.தாமோதரன் சிஐடியு செங்கொடியை ஏற்றி வைத்தார்.