திருச்சிராப்பள்ளி, மே 18- இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் மோகன் திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்த மனுவில் கூறியிருந்ததா வது: கொரோனா வைரஸ் அச்சு றுத்தல் காரணமாக தமிழகத்திலும் ஊரடங்கு மே 31 வரை நீட்டிக்கப் பட்டுள்ளது. கல்வி நிலையங்கள் எப்போது திறக்கப்படும் என்ற தீர்மான கரமான முடிவை அரசு இதுவரை அறிவிக்கவில்லை. இந்நிலையில் கொரோனா வைரஸ் தாக்கம் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் தான் இந்தி யாவில் தீவிரமாகும் என்கிற இந்திய மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை செய்து வருகின்றனர். இதற்கிடை யில் தமிழக கல்வித்துறை பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ஜூன் மாதம் நடைபெறும் என தேர்வு அட்ட வணையை வெளியிட்டுள்ளது. இது மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியை யும், மன உளைச்சலையும் ஏற்படுத்தி யுள்ளது. உடனடியாக கல்வித்துறை பொது தேர்வு அறிவிப்பை திரும்ப பெற வேண்டும். கல்வி நிலை யங்கள் திறக்கப்பட்டு வகுப்புகள் எடுக்கப்பட்டு தேர்வுக்கு மாணவர்க ளின் மனநிலை தயாரான பின்னர் பொ துத்தேர்வு நடத்தப்பட வேண்டும். இது மாணவர்களின் எதிர்காலம் சார்ந்தது என்பதை உணர்ந்து கல்வித் துறை பொதுத்தேர்விற்கான அறிவிப்பை திரும்ப பெற வேண்டும் என அவர் அந்த மனுவில் கூறியிருந்தார். ஆட்சியரிடம் மனு கொடுத்த போது மாவட்ட தலைவர் துளசிதாஸ், பள்ளி மாணவர் குழு பொறுப்பாளர் ஹரிபிரசாத், மாவட்ட குழு உறுப்பினர் ஜெயராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.
புதுக்கோட்டை
பொதுத்தேர்வு நடத்துவதை தமிழக அரசு ஒத்தி வைக்க வேண்டுமென இந்திய மாணவர் சங்கத்தின் புதுக்கோட்டை மாவட்டச் செயலாளர் எஸ்.ஜனார்த்தனன் தலைமையில் நிர்வாகிகள் ஏஎஸ்.ஓவியா, சந்தோஷ், கோபிநாத் உள்ளிட்டோர் மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்துள்ள மனுவில் கூறியுள்ளார்.