கரூர், செப்.11- பரணி பார்க் சாரணர் மாவட்டம் சார்பில் பரணி வித்யா லயா பள்ளியில் இணைய விளையாட்டுகளால் மாண வர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்த சர்வதேச கருத்த ரங்கம் புதனன்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பரணி பார்க் கல்விக் குழும தாளாளர் மோகனரெங்கன் தலைமை வகித்தார். செயலர் பத்மா வதி மோகனரெங்கன் முன்னிலை வகித்தார். பாதுகாப்பு அமைச்சக முன்னாள் தேசிய குழு உறுப்பினரும் பரணி பார்க் கல்விக்குழும முதன்மை முதல்வருமான சி.ராம சுப்பிரமணியன் இணைய விளையாட்டுகளால் மாண வர்களுக்கு ஏற்படும் மனரீதியான மற்றும் நடத்தை ரீதி யிலான பாதிப்புகள் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றி னார். சிங்கப்பூரில் இருந்து வருகை தந்த சிறப்பு கருத்தா ளர்கள் ‘இணைய விளையாட்டுகள் மற்றும் சமூக ஊட கங்களுக்கு’ மாணவர்கள் மற்றும் பெரியவர்கள் அடிமை யாவதால் குடும்பங்களில் ஏற்படும் பல்வேறு சிக்கல்கள் குறித்து விரிவாக விளக்கினர். இந்த கருத்தின் அடிப்படை யில் எடுக்கப்பட்ட ‘புளுவேல்’ திரைப்படத்தின் அறிமுக முன்னோட்ட நிகழ்வும் (Teaser launch of ‘Blue Whale’ Movie) நடைபெற்றது. இதில் சிங்கப்பூர்கவிமாலை அமைப்பின் முன்னாள் தலைவர் இறை.மதியழகன், புக்கிட் பஞ்சாங்க் குடிமக்கள் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பெ.மூர்த்தி, புளுவேல் திரைப்பட தயாரிப்பாளர் சிங்கப்பூர் அருமைச்சந்திரன் ஆகியோர் கருத்துரையாற்றினர். பரணி வித்யாலயா சாரணர் மாணவர்கள் வழங்கிய ‘சமூக ஊடகங்கள் ஏற்படுத்தும் பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வு’ சார்ந்த பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடை பெற்றன. சிறந்த சமூக ஊடக பயன்பாட்டு விழிப்பு ணர்வு கலைநிகழ்வாக “டிக் டாக்” நாடகம் தேர்ந்தெ டுக்கப்பட்டு பரிசு வழங்கப்பட்டது. பரணி வித்யாலயா பள்ளி முதல்வர் எஸ்.சுதாதேவி வரவேற்றார். பரணி பார்க் சாரணர் மாவட்டச் செயலர் ஆர்.பிரியா நன்றி கூறினார்.