குளித்தலை காவிரி ஆற்றில் குளிப்பதற்காக சென்ற மாணவிகள் நீரில் அடித்து செல்லப்பட்டனர்
காவிரி ஆற்றில் குளிப்பதற்காக இறங்கிய 4 மாணவிகள் நீரில் அடித்து செல்லப்பட்டனர் .விசாரணையில் மாணவிகள் புதுகோட்டை மாவட்டம் விராலிமலை அரசு பள்ளி மாணவிகள் எனவும் தொட்டியத்தில் உள்ள கல்லூரியில் கால்பந்து போட்டிக்காக வந்திருந்தனர் எனவும் தெரியவந்துள்ளது.
நீரில் அடித்து செல்லப்பட்ட ஒரு மாணவியை காப்பாற்ற முயன்றபோது ஒவ்வொரு மாணவியாக நீரில் அடித்து செல்லப்பட்டுள்ளனர். பல மணி நேர தேடுதலுக்கு பிறகு மணவிகள் 4 பேரும் உயிரிழந்தது தெரியவந்தது
மாணவிகளின் உடல்கள் தீ அணைப்பு துறையினரால் மீட்கப்பட்டு அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் ஆசிரியர்கள் 3 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். தலைமையாசிரியர் பொட்டு மணி, இடைநிலை ஆசிரியர் ஜெபசாய இப்ராஹிம், ஆசிரியர் திலகவதி ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். மாணவிகளை பாதுகாப்பாக அழைத்து செல்ல தவறியதால் ஆசிரியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.