கரூர், மார்ச் 1- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கரூர் மாவட்ட முன் னாள் செயலாளரும், மாவட் டத்தில் கட்சியை முன்னெ டுத்துச் சென்றதில் முக்கிய பங்கு வகித்த மூத்த தலை வருமான தோழர் து.ரா. பெரியதம்பி சனியன்று மதி யம் கரூர் பரமத்தியில் கால மானார். மறைந்த தோழர் து.ரா. பெரியதம்பியின் இறுதி ஊர் வலம், கரூர் மாவட்டம் க.பர மத்தியில் உள்ள அவரது இல் லத்தில் ஞாயிறன்று காலை 11 மணிக்கு நடந்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் கே.வரதராசன், அவரது உடலுக்கு மாலை அணிவித்து செவ்வணக்கம் செலுத்தினார். மாநிலச் செயற்குழு உறுப்பினர் கே. தங்கவேல், மாநிலக்குழு உறுப்பினர்கள் கே.பால பாரதி, கே.காமராஜ், மூத்த தலைவர் ஜி.ரத்தினவேலு, கரூர் மாவட்டச் செயலாளர் கே.கந்தசாமி, ஈரோடு மாவட்ட முன்னாள் செயலாளர்கள் கே.துரைராஜ், ப.மாரிமுத்து, தீக்கதிர் பொதுமேலாளர் எஸ்.பன்னீர்செல்வம், திருச்சி புறநகர் மாவட்டச் செயலாளர் எம்.ஜெய சீலன், திருப்பூர் மாவட்டச் செயலாளர் செ.முத்துக்கண் ணன், பாரதி புத்தகாலயம் மேலாளர் நாகராஜன், கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் செ.ஜோதிமணி, திமுக அர வக்குறிச்சி சட்டமன்ற உறுப் பினர் வி.செந்தில்பாலாஜி, மார்க்சிஸ்ட் கட்சியின் கரூர் மாவட்டச் செயற்குழு உறுப் பினர்கள் ஜி.ஜீவானந்தம், எம்.ஜோதிபாசு, பி. இலக்கு வன், பி.ராஜு, ஜெ.அன்ன காமாட்சி, கே.சக்திவேல், சி. முருகேசன், ஒன்றியச் செய லாளர்கள் கே.சண்முகம், கே.வி.பழனிச்சாமி, ராஜா முகமது, பிரபாகரன், ராஜா, பழனிவேலு மற்றும் முன் னாள் டி.ஜி.பி பாரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் ரத்தினம், தி.க. நிர்வாகி மாவட்ட நிர்வாகி அன்பு, தந்தை பெரியார் திக தனபால், தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவ ட்டச் செயலாளர் ஜான் பாஷா, வ.செ. குழந்தைசாமி நினைவு அறக்கட்டளை தலைவர் பி.டி.கோச்.தங்க ராசு, தமிழ் மாநில காங்கி ரஸ் மேற்கு மாவட்டச் செய லாளர் குப்புசாமி, அருண் டெக்ஸ் தங்கவேல், ஆசி ரியர் ஓய்வு காமராஜ், திருக் குறள் பேரவை நிர்வாகி ராம கோவிந்தன் உள்பட அர சியல் கட்சித் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் ஏரா ளமானோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.