tamilnadu

img

பஞ்சாப் விஷச்சாராய பலி  86 பேராக அதிகரிப்பு... 25 பேர் கைது 

சண்டிகர்:
பஞ்சாப் மாநிலத்தில் விஷச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை  86 பேராக அதிகரித்துள்ளது. கடந்த புதன்கிழமையன்று அமிர்தசரஸ் மாவட்டத்தில் உள்ள முச்சால் கிராமத்தில் ஒருவர் விஷச்சாராயம் குடித்து முதன்முதலில் உயிரிழந்தார். ஆனால், அதன்பின் மற்ற இரு மாவட்டங்களான தாண் தரண், குருதாஸ்பூர் ஆகியவற்றில் பலரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.வெள்ளிக்கிழமை இரவுவரை விஷச்சாராயத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 38 பேராக இருந்தது. ஆனால் சனிக்கிழமையன்று இரவு மேலும் 48 பேர் விஷச்சாரா யத்துக்கு பலியாகியதால் பலி எண்ணிக்கை 86 பேராக அதிகரித்துள்ளது.இதில் தாண் தரண் மாவட்டத்தில் மட்டும்63 பேரும், அமிர்தசரஸ் மாவட்டத்தில் 12 பேரும், குருதாஸ்பூரில் 11 பேரும் உயிரிழந்தனர் என்று பஞ்சாப் அரசு தரப்பில் தெரி விக்கப்பட்டுள்ளது.இச்சம்பவத்தை தொடர்ந்து  2 போலீஸ் டிஎஸ்பி, 4 காவல் ஆய்வாளர்கள் என 6 அதிகாரிகளையும், கலால்வரி அதிகாரிகள் 7 பேரையும் சஸ்பெண்ட் செய்து பஞ்சாப் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பவர்கள் 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.