tamilnadu

img

கொரோனா வைரஸ் பீதி...  இறைச்சி விற்கக் கட்டுப்பாடு

லக்னோ
சீனா, இத்தாலி, மலேசியா போன்ற வெளிநாடுகளில் இருந்துவரும் இந்தியர்களுக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு அறிக்கையின் படி தற்போது 29 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், நாட்டின் பல்வேறு நகரங்களில் கடும் பீதியுடன் மக்கள் முக கவசத்துடன் வெளியே செல்கின்றனர். 

இந்நிலையில் உத்தரப்பிரதேச மாநில தலைநகர் லக்னோவில் திறந்த வெளியில் இறைச்சி விற்கவும், பாதி வேக வைத்த இறைச்சியை உணவு விடுதியில் விற்கவும் அம்மாவட்ட மாவட்ட மாஜிஸ்திரேட் அபிஷேக் பிரகாஷ்  தடை விதித்துள்ளார். இறைச்சியின் மூலம் தான் கொரோனா பரவுவதாகவும், உணவு விடுதிகளைச் சுகாதாரமாகவும், சுத்தமாகவும்  வைத்துக்கொள்ளுமாறும் அவர்  கேட்டுக் கொண்டுள்ளார்.