tamilnadu

பாஜக எம்.பி.யின் திமிர்ப் பேச்சுக்கு பிஎஸ்என்எல் ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

நாகப்பட்டினம், ஆக.14- கர்நாடகாவைச் சேர்ந்த பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் மத்திய அமைச்சருமான அனந்தகுமார் ஹெக்டே எப்போதும் நாக்கில் நஞ்சு  வைத்தே பேசுபவர். அவர் பேசினால், அது சர்ச்சை யாகிவிடும். அண்மையில் அவர் பேசியபோது, பிஎஸ்என்எல் ஊழியர்கள் அனைவரும் தேசத் துரோகிகள். மத்திய அரசை எதிர்த்தே இவர்கள் போ ராட்டம் நடத்துவார்கள். ஏற்கனவே, 85 ஆயிரம் பேரை  வீட்டுக்கு அனுப்பி வைத்துவிட்டோம்; மீதிப் பேரை யும் விரைவில் அனுப்பிவிடுவோம்” என்று பேசி யுள்ளார். இதனைக் கண்டித்து நாடெங்கும் பிஎஸ்என்எல் ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்கள். நாகை பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம் சார்பில் நாகை இணைப்பகம் முன்பு கண்டன  சங்க கிளைச் செயலாளர் ஜே.அசோக் தலைமை வகி த்தார். முன்னாள் மாவட்டச் செயலாளர் எம்.முருகை யன், சங்க நிர்வாகிகள் கண்டன உரையாற்றினர்.