நாகர்கோவில், ஜூலை 7- உள்நாட்டு மீனவர் நலன்களை புறக்கணித்து தன்னிச்சையாக அலுவலக மாற்றம் செய்யப்பட்டுள்ளதைக் கண்டித்தும், தனி அலுவலகமாக நாகர்கோவிலில் செயல் படுத்திட வலியுறுத்தியும் மீன் தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். நாகர்கோவிலில் மீன்துறை உதவி இயக்குநர் அலுவ லகத்துடன் செயல்பட்டு வந்த உள்நாட்டு மீனவர் பிரிவு தற்போது உள்நாட்டு மீனவர்களின் வாழ்வாதாரத்தை யும்அவர்களின் ஒன்றுபட்ட செயல்பாட்டிற்கும் இடையூறாக அமையும் விதத்தில் திட்டமிட்டு கூறு கூறாக பிரித்து சின்னமுட்டம், குளச்சல், தேங்காய்ப்பட்டணம் ஆகிய பகுதி களில் செயல்பட்டு வரும் மீன்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் இணைத்து செயல்படுத்த மீன்துறை இயக்குனருக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மீன் துறையினர் சம்பந்தப்பட்ட மீனவர்களை கலந்து ஆலோசிக்காமல் தன்னிச்சையாக பரிந்துரை செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த சிபாரிசை ஏற்றுக்கொண்டால் உள்நாட்டு மீனவர்களது ஒன்றுபட்ட செயல்பாட்டையும், அரசிடம் பெறவேண்டிய தேவைகளை யும் சரிவர நிறைவேற்ற இயலாது. எனவே ஒருதலைபட்ச மாக குமரி மாவட்ட மீன் துறையினரின் சிபாரிசுகளை ஏற்றுக் கொள்ளாமல் உள்நாட்டு மீனவர்களின் வாழ்க்கையை கருதி 2013 ஆம் ஆண்டு வரை செயல்பட்டு வந்தது போல் உதவி இயக்குனர் மற்றும் அலுவலர்களை கொண்ட தனி அலுவலகமாக நாகர்கோவிலில் செயல்படுத்திட வலியுறுத்தி கன்னியாகுமரி மாவட்ட மீன் தொழிலாளர் சங்கம் சார்பில் செவ்வாயன்று நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு, எம்.தாமஸ் தலைமை வகித்தார். மாநில பொதுச்செயலாளர் எஸ்.அந்தோணி, மாவட்ட தலைவர் அலெக்ஸாண்டர், சிஐடியு மாவட்ட செயலாளர் கே.தங்கமோகன், ராஜன், காந்தி, பன்னீர்செல்வம், ராஜநாயகம் ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.