நாகர்கோவில், செப்.15- நாகர்கோவில் அருகே பள்ளம் கடற்கரை பகுதியில் ஞாயிறன்று காலை 11 மணியளவில் மீனவர்கள் சிலர் நின்று கொண்டிருந்தனர். அப்போது கடல் அலையில் மிதந்தபடி ராட்சத மீன் ஒன்று கரை ஒதுங்கியது. அங்கு நின்ற மீனவர்கள் அருகில் சென்று பார்த்தபோது அந்த மீன் சுமார் 8 அடி நீளமும் 150 கிலோ எடையும் இருந்தது. மூத்த மீனவர்கள் அது டால்பின் மீன் எனகூறினர். இந்த தகவல் அப்பகுதியில் பரவியதால் பள்ளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி மக்களும் குழந்தைகளும் பார்த்து சென்றனர். மூத்த மீனவர்கள் டால்பின் மீனை மீண்டும் கடலில் விட்டுவிட கூறினர். எனவே மீனவர்கள் அந்த டால்பின் மீனை ஒரு வள்ளத்தில் ஏற்றி நடுக்கடலில் கொண்டு சென்று விட்டு விட்டு திரும்பினர்.