நாகர்கோவில், ஆக.29- கட்டுமான தொழிலாளர்க ளுக்கு நிலுவையில் உள்ள பண பலன்களை உடனடியாக வழங் கக் கோரிக்கை விடுக்கப்பட்டுள் ளது. இதுகுறித்து குமரி மாவட்ட கட்டுமானத் தொழிலாளர் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப் பட்டது. அதன் விபரம் வருமாறு, நாகர்கோவில் தொழிலாளர் உதவி ஆணையர் அலுவல கத்தில் பணம் கேட்டு விண்ணப் பித்து இதுவரை நல உதவிகள் கிடைக்காத நூற்றுக்கணக்கான தொழிலாளர்களின் கேட்பு மனுக் கள் அலுவலகத்தில் தேக்கி வைக்கப்பட்டு உள்ளன. குறிப் பாக விபத்து மரணம் நிதி கேட்டு விண்ணப்பித்து 10 ஆண்டுகளாக வும், இயற்கை மரணம் நிதி கேட்டு விண்ணப்பித்து ஆறு ஆண்டுக ளாகவும், ஓய்வூதியம் பெற்று வந்த தொழிலாளி இறந்த பின் வழங்கப்படும் குடும்ப ஓய்வூதி யம் விண்ணப்பித்து பல ஆண்டு களாகியும் இதுவரை பண பலன் கள் வழங்காமல் வைத்துள்ள னர். இதனால் தொழிலாளர்கள் பல துன்பங்களை அனுபவித்து வருகின்றனர். எனவே தொழிலா ளர்களுக்கு உடனடியாக பண பலன்களை வழங்க வேண்டும். இதுவரை நிவாரணம் கிடைக்காத தொழிலாளர்களுக்கு கொரோ னா கால நிவாரண தொகை வழங்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது. இந்த மனுவை, கட்டுமானத் தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் கே.செல்லப் பன், மாவட்ட செயலாளர் கே.பி.பெருமாள், சிஐடியு மாவட்ட செயலாளர் கே.தங்கமோகன் உள்ளிட்டோர் மாவட்ட ஆட்சிய ரிடம் அளித்தனர்.