திருச்சிராப்பள்ளி, அக். 19- கட்டட கட்டுமான தொழி லாளர் சட்டம் 1996 மற்றும் 36 மாநில கட்டுமான தொழி லாளர் நலவாரியத்தை சீர் குலைக்கும் மத்திய அரசின் நடவடிக்கையை தடுத்து நிறுத்த வலியுறுத்தி இந்திய கட்டுமான தொழிலாளர் சங்கம் (சிஐடியு) சார்பில் நாடாளுமன்ற சபாநாயகரு க்கு கோரிக்கை மனு அளிக் கப்பட உள்ளது. அதனொரு பகுதியாக இந்திய கட்டுமான தொழிலா ளர் சங்க திருச்சி கிழக்கு பகு திக்குழு சார்பில் சனிக்கிழ மை மேல சிந்தாமணி பகுதி யில் கட்டுமான தொழிலா ளர்களிடம் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. கையெழுத்து இயக்கத்திற்கு மாநகரக்குழு உறுப்பினர் நாகேந்திரன் தலைமை வகித்தார். இதில் மாவட்ட செயலாளர் சந்திரசேகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.