அகமதாபாத்:
கடந்த மார்ச் மாதம், நாடு தழுவிய ஊரடங்கு அறிவிக்கப்பட்ட போது, பாஜக ஆளும் குஜராத் மாநிலத்தில், கட்டுமானத் தொழிலாளர்களுக்கு ரூ. 1000 ரொக்கம்உடனடி நிவாரணமாக வழங்கப் படும் என்று அறிவிக்கப்பட்டது.இந்த ‘உடனடி’ நிவாரணம் அந்தந்த தொழிலாளர்களின் வங்கிக் கணக்குக்கு மாற்றப்படும் எனவும்அரசு அறிவித்தது.
ஆனால், முதற்கட்ட ஊரடங்கின்போது அறிவிக்கப்பட்ட நிவாரண தொகை ரூ. 1000, நான்குமாதமாகியும் இன்றும் 40 சதவிகிததொழிலாளர்களுக்கு கிடைக்கவில்லை என்ற உண்மை தற்போதுவெளிச்சத்திற்கு வந்துள்ளது.இதுதொடர்பாக விமர்சனங் கள் எழுந்துள்ள நிலையில், தொழிலாளர்களின் வங்கிக் கணக்கு எண்தங்களிடம் இல்லாததால் நிவாரணத் தொகையை அதில் செலுத்த முடியவில்லை என்று குஜராத் பாஜக அரசு மிக எளிதாக கூறியுள்ளது. “எங்களிடம் தொழிலாளர் களின் வங்கிக் கணக்கு குறித்தசரியான விவரங்கள் இல்லை. மொத்தமுள்ள 6 லட்சத்து 38 ஆயிரம் தொழிலாளர்களில், நாங்கள் முதற்கட்டமாக 4 லட்சத்து 50 ஆயிரம் தொழிலாளர்களின் கணக்குகளில் ரூ. 1000 நிவாரணத்தைச் செலுத்த திட்டமிட்டோம். ஆனால்3 லட்சத்து 68 ஆயிரத்து கணக்குகளுக்கு மட்டுமே மாற்ற முடிந்தது”என்று குஜராத் கட்டுமானத் தொழிலாளர்கள் வாரியச் செயலாளர் பிரஜாபதி தெரிவித்துள்ளார். அதாவது, சரிபாதி கட்டுமானத் தொழிலாளர்களுக்கு- அதாவது,2 லட்சத்து 70 ஆயிரம் தொழிலாளர்களுக்கு உடனடி நிவாரணத் தொகை வழங்கப்படவில்லை’என்பதை அவரே வெளிப்படையாக ஒப்புக்கொண்டுள்ளார்.