tamilnadu

img

தடைசெய்யப்பட்ட பகுதி மக்களுக்கு சிபிஎம் நிவாரணம்

அருமனை, ஜுலை 12- நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக் கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருக்கும் நிலையில் பாதிக்கப்பட்டோ ருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பலஉதவி களை செய்து வருகிறது.     கன்னியாகுமரி மாவட்டத்திலும் நோய் தொற்று அதிகரித்து வருகிறது. இந்நிலையில் அருமனை தொற்றிவிளை பகுதியைசேர்ந்த ஒருவர்  நெஞ்சுவலிக்காக  குலசேகரம் தனியார் மருத்துவமனையில் உள்நோயாளியாக அனு மதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று  வந்தார். அவருக்கு கொரோனா தொற்று இருப்பதாக கூறி நோயாளி யும் மனைவி மற்றும் மகனை ஆசாரிபள்ளம் மருத்துவகல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.  பின்னா் தெற்றிவிளை பகுதியை  பேரூராட்சி நிர்வாகம்  தடை செய்யப்பட்ட பகுதி யாக அறிவித்து சுமார் 30 வீடுகள் தனிமை படுத்தப்பட்டன.  இப்பகுதி மக்களுக்கு மார்க்சிஸ்ட் கட்சியின் மழுவன்சேரி கிளை சார்பாக முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் ஆர்.லீமாறோஸ்  நிவாரண பொருட்கள்   வழங்கினார். வட்டார செயலாளர் சசி குமார், வட்டாரக்குழு உறுப்பினர்கள்  மற்றும் அரு மனை பேரூராட்சி ஊழியர்கள் கலந்து கொண்ட னர்.