tamilnadu

img

பைசர் மருத்துவ தொழிற்சாலை பிரச்சனையில் அரசு தலையிடக் கோரி சிஐடியு போராட்டம்

திருப்பெரும்புதூர், ஜூன் 10- காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பெரு ம்புதூர் அடுத்த இருங்காட்டுக்கோட்டை சிப்காட் பகுதியில்  கடந்த 15 ஆண்டு களுக்கு மேலாக பைசர் ஹெல்த் ஹேர் என்ற மருந்து தயாரிக்கும நிறுவனம் செயல்பட்டு வந்தது.  இது அமெரிக்காவைச் சேர்ந்த நிறுவன மாகும். இந்த நிறுவனத்தில் ஆயிரத்திற்கு மேற்பட்ட நிரந்தர தொழி லாளர்களும், 500க்கும் மேற்பட்ட ஒப்பந்த ஊழியர்களும் பணிசெய்து வந்தனர். இந்நிலையில் எவ்வித, முன்னறி விப்பும் இல்லாமல் கடந்த ஜனவரி மாதம் 19ஆம் தேதி இந்த நிறுவனம் மூடப்பட்டது.  இதனைத் தொடர்ந்து இதில் பணியற்றிய நிரந்தர தொழிலா ளர்களுக்கு மட்டும்  ரூ. 15 லிருந்து 20 லட்சம் வரை இழப்பீட்டுத் தொகை வழங்கியதாகக் கூறப்படுகின்றது. ஆனால், பைசர் தொழிற்சாலை யில் 15 ஆண்டுகளாக பணியாற்றிய ஒப்பந்த, தற்காலிக ஊழியர்களுக்கு எந்த வித இழப்பீடும் வழங்கப்பட வில்லை. பதிக்கப்பட்ட தொழிலாளர்கள் பல்வேறு வடிவங்களில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனைத் தொடார்ந்து பாதிக்கப்பட்டதொழிலாளர்கள்  சிஐடியு சங்கத்தின் சார்பில் பைசர் தொழிற்சாலை முன்பாக ஆர்ப்பாட்ட த்தில் ஈடுபட்டனர். பணிக்கொடை சட்டத்தின் கீழ் பைசர் தொழிற்சாலையில் பணி யாற்றிய தொழிலாளர்களுக்கு இழப்பீடு வழங்கிட வேண்டும், தொழிலாளர் நலத்துறை துணை ஆணையர் விமல நாதன் தலைமையில் நடைபெறும் சமரச பேச்சுவார்த்தைக்கு பைசர் நிர்வாகம் வரவேண்டும் என வலியுறுத்தப்பட்டது.  இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு மாவட்டத் தலைவர் எஸ்.கண்ணன் தலைமை தாங்கினார். மாவட்ட துணைச் செயலாளர் க.பகத்சிங்தாஸ், அஸாகி தொழிற்சங்கத் தலைவர் ஜோசப் உள்ளிட்ட ஏராளமான தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். தமிழக அரசு தலையிடுக திருப்பெரும்புதூர் தொழிற்பேட்டை பகுதியில் தொடர்ந்து எவ்வித அறி விப்பும் இல்லாமல் தொழிற்சாலைகள் மூடபடுகின்றன. இதனால்  தொழி லாளர்கள் வீதியில் நிற்கும் அவலநிலை ஏற்படுகிறது.  சோவல் இந்தியா நிறுவனம் கடந்த மாதம் நள்ளிரவில்  ஆலை மூடல் செய்யப்பட்டதால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வீதியில் நிற்கின்றனர். இதே நிலைதான் அஸாகி கண்ணாடி தொழிற்சாலையில் பணியாற்றிய தொழிலாளர்களுக்கும். இவர்கள்  76 நாட்களாக தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். தற்போது பைசர் ஹெல்த் ஹேர் நிறுவனம். இந்தப் பிரச்சனை களில் தமிழக அரசு உடனடியாக தலை யிட்டு தொழிலாளர்களை பாதுகாக்க வேண்டும் என சிஐடியு கோரிக்கை விடுத்துள்ளது.