பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து சிஐடியு மற்றும் அனைத்து சங்கங்களின் சார்பில் 10 நிமிடம் வாகனங்களை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பெட்ரோல், டீசல் விலையை குறைக்கவும், ஒன்றிய அரசின் கவனத்தை ஈர்க்கவும் சிஐடியூ சார்பில் அனைத்து வாகன ஓட்டிகளும் 10 நிமிடம் வாகனத்தை நிறுத்த அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் நகரம் மற்றும் புறநகர் என 15 முதல், 25 பகுதிகள் தேர்வு செய்து போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில் கோவை, மதுரை, ஈரோடு, புதுக்கோட்டை, மதுராந்தகம், தூத்துக்குடி, செங்கல்பட்டு, திருப்பூர் உள்பட பல்வேறு பகுதிகளில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து 10 நிமிடம் வாகனம் நிறுத்த போராட்டம் நடத்தினர். அதனை தொடர்ந்து புதுச்சேரியிலும் சிஐடியு தொழிற்சங்கத்தினர் சார்பில் 10 நிமிடம் சாலையில் சென்ற வாகனத்தை மறைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.