திருச்சிராப்பள்ளி, மார்ச்.1- இந்தியாவில் மோட்டார் தொழிலை கார்ப்பரேட்டுகள் வசம் ஒப்படைக்கும் ஒன்றிய பாஜக அரசை கண்டித்தும், மோட்டார் தொழிலை பாது காக்க வலியுறுத்தியும் சிஐடியு சார்பில் பிப்ரவரி 28 அன்று 15 நிமிட வாகன நிறுத்தப் போராட் டம் நடைபெற்றது. திருச்சி சமயபுரம் நால்ரோடு அருகே நடைபெற்ற போராட் டத்திற்கு ஆட்டோ சங்க புறநகர் மாவட்டப் பொருளாளர் சேகர் தலைமை வகித்தார். சிஐடியு புறநகர் மாவட்டச் செயலாளர் சிவராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மண்ணச்சநல்லூரில் சிஐ டியு மாவட்டப் பொருளாளர் பன் னீர்செல்வம் தலைமை வகித் தார். ஆட்டோ சங்கத் தலைவர் தண்டபாணி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். மணப்பாறையில் ஆட்டோ சங்க மாவட்டத் தலைவர் நவ மணி தலைமை வகித்தார். துவ ரங்குறிச்சியில் ஆட்டோ சங்க கிளைச் செயலாளர் ஷாஜகான் தலைமை வகித்தார். சிஐடியு துணை செயலாளர் புஷ்பராஜ், ஆட்டோ சங்க செயலாளர் ஆறு முகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முசிறியில் ஆட்டோ சங்க மாவட்டக் குழு உறுப்பினர் பார்த் தீபன் தலைமை வகித்தார். வையம்பட்டியில் தரைக்கடை சங்க தலைவர் அந்தோணி தலைமை வகித்தார். லால்குடி யில் பாலு தலைமையில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்தில் எம்.கே. தங்கராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அரியலூர்
அரியலூர் அண்ணாசிலை அருகில் சிஐடியு மாவட்ட துணைச் செயலாளர் சந்தா னம் தலைமையில் ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. சிஐடியு மாவட்டச் செயலாளர் துரை சாமி, மாவட்டத் தலைவர் கிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
திருவாரூர்
திருவாரூர் மாவட்டம் குட வாசல் விபி சிந்தன் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற போராட்டத்திற்கு சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் எம்.அம் பேத்கார் தலைமை வகித்தார். மாவட்ட துணைச் செயலாளர் கே.கஜேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.