tamilnadu

img

ரவுடிகளை ஒடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் காஞ்சிபுரம் சரக டிஐஜி சாமுண்டீஸ்வரி பேட்டி

காஞ்சிபுரம், ஜூலை 2- ரவுடிகளை ஒடுக்க நட வடிக்கை எடுக்கப்படும் என்று காஞ்சிபுரம் சரக டிஐஜி  சாமுண்டீஸ்வரி தெரி வித்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியாற்றிவந்த பா. சாமுண்  டீஸ்வரி, காஞ்சிபுரம் சரக டிஐஜியாக வியாழனன்று (ஜூலை 2) பொறுப்பேற்றுக் கொண்டார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: காஞ்சிபுரம் சரகத்தில் ரவுடிகள் பட்டியலிட்டு, கண்காணிக்கப்பட்டு கைது செய்யப்படுவார்கள். இதற் கென்று தனியாக ஒரு படை அமைக்கப்பட உள்ளது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மூன்று மாவட்டங்களில் உள்ள மக்கள் குற்றம் சார்ந்த தக வல்களை தெரிவிக்கவும், தேவையான உதவிகளை பெறவும் 7397001493, 739700 1398 ஆகிய இரு செல்போன்  எண்களை தொடர்பு கொள்ளலாம்.

காவல் மாணவர் படை, போலீஸ் நண்பர்கள்  குழு ஆகியன விரிவுபடுத் தப்படும். போக்குவரத்தை ஒழுங்குபடுத்தவும், பெண் களின் பாதுகாப்புக்கு முக்கி யத்துவம் அளிக்கவும் நடவ டிக்கை எடுக்கப்படும். ஊர டங்கில் திருமணம், இறுதி ஊர்வலம் போன்றவற்றில் அதிக கூட்டம் சேர்ந்தால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது வழக்கு பதியப்படும்.  காஞ்சிபுரம் 31 பேர், செங்  கல்பட்டு 20 பேர், திருவள்ளூர்  23 பேர் என 74 பேர் கடந்த  ஓராண்டில் குண்டர் தடுப்பு  சட்டத்தில் கைது செய்யப்  பட்டுள்ளனர். போராட்டங்க ளின் போது விதிகளை மீறிய தாக 85 ஆயிரத்து 758 பேர்  மீது வழக்குகள் பதிவு செய்  யப்பட்டுள்ளது. 71 ஆயிரத்து 206 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறி னார்.