tamilnadu

img

காஞ்சியில் கொரோனா  வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள்

காஞ்சிபுரம்,மார்ச் 18- காஞ்சிபுரத்தில் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில்  பெருநகராட்சி சுகாதாரப் பிரிவு சார்பாக தீவிர கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ்  பாதிப்பால் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ள னர்.  தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்  பட்டுள்ளன. பெருநகராட்சி சுகாதாரப் பிரிவு சார்பில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் உள்ள வந்தவாசி சாலை யில் கொரோனா வைரஸ் தடுப்பு  மருந்துகள்  தெளிக்கப் பட்டது. மேலும் அவ்வழியாக சென்ற பேருந்துகள், இருசக்கர  வாகனங்கள், கார் உள்ளிட்ட நான்கு சக்கர வாகனங்க ளுக்கும் தடுப்பு மருந்து தெளிக்கப்பட்டதுடன், பயணம் செய்த வர்களுக்கு கெரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பது குறித்த  துண்டு பிரச்சாரமும் வழங்கப்பட்டது. இதில், காஞ்சிபுரம் பெரு நகராட்சியின் நகர் நல அலுவலர் முத்து மற்றும் நகராட்சி ஆய்வாளர் ரமேஷ் ஆகியோருடன் நகராட்சி ஊழியர்களும் பங்கேற்று கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிர மாக செய்து வருகின்றனர்.