tamilnadu

img

கேரளாவை மாதிரியாக கொள்ள அறிவுறுத்தல்

கொரோனோ வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள்

திருவனந்தபுரம், பிப். 5- கொரோனா வைரஸ் தடுப்பில் கேரளா வை முன்மாதிரியாகக் கொள்ளுமாறு மத்திய சுகாதார அமைச்சகம் பிற மாநிலங்களை அறிவுறுத்தியுள்ளது.   சீனாவில் கொரோனா பாதிப்பு குறித்த தகவல் வந்த நாள் முதல் கண்ணிமைக் காமல் கேரளம் மேற்கொண்ட தலையீடு களையே மத்திய சுகாதாரத்துறை முன்மாதிரியாக குறிப்பிட்டுள்ளது. கேரளத்தில் இது தொடர்பான செயல்பாடு களை மத்திய சுகாதாரத்துறை செயலாளர் பிரீத்தி சுதன் பாராட்டினார். செவ்வாய்க்கிழமை மாநிலத்தில் வைரஸ் பாதிப்பு எதுவும் இல்லை என்று  கேரள சுகாதார அமைச்சர் கே.கே.ஷைலஜா தெரிவித்தார். பல்வேறு மாவட்டங்களில் 2421 பேர் கண்காணிக்கப்படுகிறார்கள். இவர்களில் 2,221 பேர் வீடுகளிலும் 100 பேர் மருத்துவமனையிலும் உள்ளனர். 190  நபர்களின் மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டன. இதில் 118 பேரது மாதிரிகள் ஆலப்புழயில் ஆய்வு செய்யப் பட்டன.

மூவரின் நிலை மேம்பட்டுள்ளது

கொரோனா உறுதிப்படுத்தப்பட்ட திருச்சூர், ஆலப்புழா காசர்கோடு மாண வர்களின் நிலை திருப்திகரமாக உள்ளது. மாவட்டங்களில் இருந்து மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பப்படுகின்றன. மேலும் இருவர் காசர்கோடு மாவட்டத்தில் உள்ள தனிமை வார்டுக்கு மாற்றப்பட்டனர். ஆலப்புழயில் புதிதாக யாரும் கண் காணிப்புக்கு உட்படுத்தவில்லை. இதற்கிடையில், பொய் செய்திகளை பரப்பிய மனோஜ் (44) என்பவரை திருச்சூர் காவல்துறையினர் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர். இதுபோன்ற பொய் செய்திகளுக்காக 7 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.  

சீனாவில் உயிரிழப்பு – 449

கொரோனா வைரஸ் காரணமாக 425 பேர் இறந்ததாக சீனா கூறுகிறது. ஒரு  கெரோனா மரணம் ஹாங்காங்கில் பதிவாகி யுள்ளது. ஒருவர் பிலிப்பைன்ஸில் இறந்தார். இதன் மூலம் இறப்பு எண்ணிக்கை 427ஆக உயர்ந்துள்ளது. வுஹானைச் சேர்ந்த  முப்பத்தொன்பது பேர் ஹாங்காங்கில் இறந்தனர். சீனாவில் வைரஸால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை 24,000ஐ  எட்டியுள்ளது. அமெரிக்காவிலும் சிங்கப்பூரி லும் இந்த வைரஸ் மனிதனிடமிருந்து மனிதனுக்கு பரவியுள்ளது. பெல்ஜியத்தில், கொரோனா உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், வைரஸால் பாதிக்கப்பட்ட நாடு களின் எண்ணிக்கை 25 ஐ எட்டியுள்ளது.