tamilnadu

காஞ்சிபுரத்தில் கொரோனா தொற்று 2,000-ஐ கடந்தது

காஞ்சிபுரம், ஜூலை 1- காஞ்சிபுரம் மாவட்டத் தில் கொரோனா பாதிக் கப்பட்டவர்களின் எண் ணிக்கை 2 ஆயிரத்தை கடந்தது. 1,981 பேருக்கு தொற்று  கண்டறியப்பட்ட நிலையில்  மேலும் 86 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்  பட்டது. இதனால் பாதிக் கப்பட்டோர் எண்ணிக்கை 2 ஆயிரத்து 67 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 844 பேர் குணமடைந்தனர். 23 பேர் உயிரிழந்தனர். 1200 பேர் சிகிச்சையில் உள்ளனர். தமிழகத்தில் கொரோனா  தொற்றால் பாதிக்கப் பட்டோர் பட்டியலில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், மதுரையை தொடர்ந்து 5வது இடத்தில் காஞ்சிபுரம் உள்ளது குறிப்பிடத்தக்கது.